பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' திட்டம்; ஊட்டி நகராட்சி விருப்பம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஊட்டி:'சர்வதேச சுற்றுலா மையமான ஊட்டியை, சிறப்பு சலுகை அடிப்படையில், 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்ற வேண்டும்' என, ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில், மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி பகுதியில், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மான் பூங்கா, தேயிலை பூங்கா, படகு இல்ல ஏரி, தொட்டபெட்டா காட்சி முனை, அரசு அருங்காட்சியகம் ஆகியவை

ஊட்டி:'சர்வதேச சுற்றுலா மையமான ஊட்டியை, சிறப்பு சலுகை அடிப்படையில், 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்ற வேண்டும்' என, ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில், மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி பகுதியில், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மான் பூங்கா, தேயிலை பூங்கா, படகு இல்ல ஏரி, தொட்டபெட்டா காட்சி முனை, அரசு அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. இங்கு, ஏப்., மே மாதத்தில் கோடை சீசன், செப்., அக்., மாதத்தில் இரண்டாவது சீசன் நிலவுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணியர் வருகின்றனர்.ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதி கூறுகையில்,''ஊட்டியில் ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். நகராட்சியாக இருந்தாலும், சர்வதேச சுற்றுலா மையமாக இருப்பதால், சிறப்பு சலுகை அடிப்படையில், 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்ற மத்திய அரசிடம், நகராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X