சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிர்வாணமாக சென்று திருடும் ஆசாமி கைது: கோவை உட்பட 17 இடங்களில் கைவரிசை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை:கோவை உள்பட பல்வேறு இடங்களில் நிர்வாணமாக சென்று திருடுவதை வழக்கமாக கொண்டிருந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.கோவை, சிங்காநல்லுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த சில மாதங்களாக பைக் மற்றும் கார் ஷோரூம்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. சில நாட்களுக்கு முன், சிங்காநல்லுாரில் ஒரு பைக் விற்பனை கடையில் பணம் திருடப்பட்டது. சிங்காநல்லுார் போலீசார்
 நிர்வாணமாக சென்று திருடும் ஆசாமி கைது: கோவை உட்பட 17 இடங்களில் கைவரிசை

கோவை:கோவை உள்பட பல்வேறு இடங்களில் நிர்வாணமாக சென்று திருடுவதை வழக்கமாக கொண்டிருந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.கோவை, சிங்காநல்லுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த சில மாதங்களாக பைக் மற்றும் கார் ஷோரூம்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. சில நாட்களுக்கு முன், சிங்காநல்லுாரில் ஒரு பைக் விற்பனை கடையில் பணம் திருடப்பட்டது. சிங்காநல்லுார் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அப்போது, 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கடை முன் வருவதும், தான் அணிந்திருந்த உடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக கடைக்குள் சென்று திருடுவதும், பின் மீண்டும் வெளியே வந்து தனது உடைகளை மாற்றி செல்வதும் பதிவாகியிருந்தது.இதேபோன்று மேலும் சில இடங்களிலும் இந்த நபர் கைவரிசை காட்டியது கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது. முகத்தை மட்டும் மூடிக்கொண்டு நிர்வாணமாக சென்று கொள்ளையடித்து வந்த நபரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிவகங்கையை சேர்ந்த பாண்டியன், 42, என்பவரை பழநி யில் போலீசார் நேற்று கைது செய்து, கோவை அழைத்து வந்தனர்.நிர்வாணமாக திருட்டு ஏன்?போலீசாரிடம் பாண்டியன் அளித்த வாக்குமூலம்:நான் குடும்பத்துடன் பழநியில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தேன். கொரோனா ஊரடங்கால் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் திருட முடிவு செய்தேன். பணம் அதிகளவு புழங்கும் பெரிய நிறுவனங்களை குறிவைத்து திருடினேன்.பகல் நேரங்களில் சென்று நோட்டமிடுவேன். நள்ளிரவில் அங்கு சென்று, கடைக்கு முன் எனது உடைகளை கழற்றி வைத்துவிடுவேன். உடைகளை வைத்து போலீசார் என்னை கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், நிர்வாணமாக சென்று கொள்ளையடித்து வந்தேன். இதுவரை, 15 லட்சம் ரூபாய் வரை திருடியுள்ளேன். திருடிய பணத்தை எனது மற்றும் தாயின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்தினேன்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.கோவை, சென்னை, மதுரை உள்பட, 17 இடங்களில் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான பாண்டியன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.கற்பூரம் ஏற்றி வழிபாடுதிருடபோகும் இடத்தில் அதிக பணம் கிடைத்தால், திருடிவிட்டு வெளியே வந்ததும் அந்த ஷோரூம் முன் கற்பூரம் ஏற்றி வழிபடுவதை வழக்கமாக செய்துள்ளார். பின், சிறிது நேரம் அங்கேயே படுத்து துாங்கிவிட்டு அதிகாலை நேரத்தில் எழுந்து சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X