சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவாமிமலையில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்;வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்க வலியுறுத்தி, சுவாமிமலை முருகன் கோவில் முன் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொரோனா பரவல் காரணமாக தமிழக கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட அரசு தடை விதித்துள்ளது. இதைக் கண்டித்து, முருகப் பக்தர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்

தஞ்சாவூர்;வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்க வலியுறுத்தி, சுவாமிமலை முருகன் கோவில் முன் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொரோனா பரவல் காரணமாக தமிழக கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட அரசு தடை விதித்துள்ளது. இதைக் கண்டித்து, முருகப் பக்தர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோர் தலைமையில், நேற்று சுவாமிமலை முருகன் கோவில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், கொரோனா பரவலை காரணம் காட்டி வாரத்தில் மூன்று நாட்கள் பொதுமக்கள் கோவில்களில் வழிபடும் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X