பொது செய்தி

இந்தியா

தற்போதைக்கு 'பூஸ்டர் டோஸ்' பொருத்தமானது அல்ல: ஐ.சி.எம்.ஆர்.,

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'பூஸ்டர் டோஸ் தற்போதைய நிலையில் பொருத்தமானது அல்ல. வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில்தான் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது' என, ஐ.சி.எம்.ஆர்., இயக்குநர் தெரிவித்துள்ளார்.உலக நாடுகள் அனைத்திலும் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், 'உருமாற்றம் அடைந்த கோவிட்

புதுடில்லி: 'பூஸ்டர் டோஸ் தற்போதைய நிலையில் பொருத்தமானது அல்ல. வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில்தான் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது' என, ஐ.சி.எம்.ஆர்., இயக்குநர் தெரிவித்துள்ளார்.latest tamil newsஉலக நாடுகள் அனைத்திலும் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், 'உருமாற்றம் அடைந்த கோவிட் வைரசுக்கு எதிராக இரண்டு டோஸ்கள் கொண்ட தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக உள்ளது' என, ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கூடுதலாக ஒரு டோஸ் (பூஸ்டர்) செலுத்த நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


latest tamil newsஇந்நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா கூறுகையில், 'இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? என்ற கேள்வியை பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்து கொண்டே இருக்கிறது. தற்போதைக்கு வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில்தான் இந்திய அரசின் முழுக்கவனம் இருக்கிறது. பூஸ்டர் டோஸ் என்பது தற்போதைய நிலையில் பொருத்தமானது அல்ல' என, தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
01-அக்-202123:41:07 IST Report Abuse
Akash This fellow is cunningly twisting things because he does NOT have enough supply. In the US aged people and people with pre existing conditions are allowed a third dose.
Rate this:
Cancel
01-அக்-202115:50:41 IST Report Abuse
அப்புசாமி முதல்ல போட வேண்டிய ரெண்டு டோஸ்களே போட்டு முடிக்கலே.. வெயிட் பண்ணுங்க.. அமெரிக்காவுலேருந்து தரவுகள் வரட்டும்... பாக்கலாம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-அக்-202113:17:37 IST Report Abuse
Ramesh Sargam பூஸ்டர் டோஸ் தற்போதைய நிலையில் பொருத்தமாக இல்லாமல் போகலாம். ஆனால், அமெரிக்கா அதிபரே அந்த பூஸ்டர் டோசை போட்டுக்கொண்டிருக்கிறார். போட்டுக்கொள்வதால் எந்த தவறும் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. ஆகையால், மெதுவாக பூஸ்டர் டோஸ் போடுவதை அரசு இப்பொழுதே ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X