விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் சேர்க்க உதவிய ஆப்பிள் வாட்ச்

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சிங்கப்பூர்: சாலை விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்த நபரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியிருக்கிறது.தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு பெருமளவு உதவி புரிந்து வருகிறது. அந்தவகையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று, விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்ததை நம்ப முடிகிறதா. ஆம், ஆப்பிள் வாட்சில் ஆபத்து காலங்களில் அவசர உதவி பிரிவுக்கு
Singapore, Man Unconscious, Apple Watch, Man, After Accident, Saved, Calls, Emergency Services, SOS, சிங்கப்பூர், ஆப்பிள் வாட்ச், விபத்து, மருத்துவமனை, அவசர உதவி

சிங்கப்பூர்: சாலை விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்த நபரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியிருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு பெருமளவு உதவி புரிந்து வருகிறது. அந்தவகையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று, விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்ததை நம்ப முடிகிறதா. ஆம், ஆப்பிள் வாட்சில் ஆபத்து காலங்களில் அவசர உதவி பிரிவுக்கு தகவல் தெரிவிக்கும் எஸ்.ஓ.எஸ் வசதி உள்ளது. ஏதேனும் அவசர நிலை எனில் வாட்சில் உள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் அல்லது வாட்சில் தூண்டப்படும் அதிர்வுகளால் அவசர உதவி எண்களுக்கு இருப்பிடத்துடன் கூடிய தகவல் அனுப்பிவிடும்.


latest tamil news


அந்தவகையில், சிங்கப்பூரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முகமது பிட்ரி என்பவர் மீது வேன் ஒன்று மோதியது. இதில், நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த அவர் மயக்கமடைந்தார். விபத்தினால் உண்டான அதிர்வுகளால் முகமது பிட்ரியின் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்சில் இருந்து அவசர உதவி எண்ணிற்கு தகவல் சென்றுள்ளது. அதன்மூலம் இருப்பிடத்தை அறிந்து, விபத்தில் இருந்து முகமது பிட்ரி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்து நேரத்தில் உதவியதுடன் மயக்கமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதிக்க பெரிதும் உதவிய ஆப்பிள் வாட்ச், முகமது பிட்ரியின் வாழ்வில் மறக்க முடியாததாக மாறியிருக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
01-அக்-202121:36:10 IST Report Abuse
jagan அவர்களே உருவாக்கிய விளம்பரம்
Rate this:
Cancel
01-அக்-202119:37:56 IST Report Abuse
THALA Nachi டாஸ்மார்க் குடி மகன்களுக்கு கட்டி விடுங்க. இரவு நேரத்துலை கண்டிபிடிக்க முடிய வில்லை..😆😆
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
01-அக்-202118:04:40 IST Report Abuse
சீனி நல்ல செய்தி தான். கால் டாக்சி, லாரி டிரைவர்களுக்கு இதுமாதிரி ஒரு வாட்ச் எதுனா கம்பெனி குறைஞ்ச வெலைல தயார்பண்ணா சாதாரண மக்களுக்கும் உதவியா இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X