பொது செய்தி

இந்தியா

இறந்தவருக்கு தடுப்பூசி சான்றிதழ்? ஆதாரமற்ற புகார் என அரசு மறுப்பு!

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கடந்த மாதம் 17ல் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மட்டும் நாடு முழுதும், 2.5 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. எனினும் சில மாநிலங்களில் இறந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண்

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கடந்த மாதம் 17ல் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மட்டும் நாடு முழுதும், 2.5 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. எனினும் சில மாநிலங்களில் இறந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் நேற்று கூறியதாவது:

பிரதமர் பிறந்த நாளில் 2.5 கோடிக்கு மேல் தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த சாதனையை சீரழிக்கும் நோக்கில், இறந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என, ஆதாரமின்றி புகார்கள் கூறப்படுகின்றன.மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் ஒரு தவறு நடந்தது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக, தன் பெயரை ஒருவர் பதிவு செய்திருந்தார்.

ஆனால் தடுப்பூசி போடும் மையத்துக்கு அவர் வரவில்லை. ஆனால் தடுப்பூசி போடுபவர், தவறாக பட்டனை அழுத்தியதால், அவருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கணக்கு வந்தது. அந்தத் தவறு பின் திருத்தப்பட்டுவிட்டது. அந்த நபர் இறந்த தகவல், பின்னர் தெரிய வந்தது. இதைத்தவிர வேறு எந்த தவறும் நடக்கவில்லை. மற்ற மாநிலங்கள் இதுபோல் தவறு நடந்ததாக கூறுபவர்கள் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X