பொது செய்தி

இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றியதா டாடா? மத்திய அரசு மறுப்பு

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
புதுடில்லி: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. இதனால், அந்நிறுவனத்தை விற்க, கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால்,

புதுடில்லி: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.latest tamil newsமத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. இதனால், அந்நிறுவனத்தை விற்க, கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால், அந்நிறுவனத்தின் கடன் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும், கோவிட் ஊரடங்கால் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில், ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்கு உள்ளானது.


latest tamil newsஇந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய விற்பனை நடவடிக்கை கோவிட் தொற்று காரணமாக தாமதமானது. பின், கடந்த ஏப்ரல் மாதம் இந்த பணிகளை முடுக்கிவிட்ட மத்திய அரசு, இதற்கான இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்., 15ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து, ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.


latest tamil newsஇதற்காக, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட, தொகை மற்றும் திட்டத்தை அமித் ஷா தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை ப்ளூம்பெர்க் மற்றும் மனி கண்ட்ரோல் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.


மறுப்பு


ஆனால், மத்திய அரசு இதனை மறுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளர் கூறுகையில், ‛ஏர் இந்தியா ஏலம் மற்றும் ஒப்புதல் தொடர்பாக வெளியான தகவல்கள் தவறானவை. அரசின் முடிவுகள் அனைத்தும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்,' எனக் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
03-அக்-202110:03:07 IST Report Abuse
Gokul Krishnan அடிமாட்டு விலைக்கு விற்றாலும் அதானி குழுமத்துக்கு மட்டும் தான் விற்போம் அதான் எங்களின் ஒரே கொள்கை
Rate this:
Cancel
02-அக்-202109:27:02 IST Report Abuse
அப்புசாமி ஹி..ஹி... டாட்டா நிறுவனம் கைப்பற்றவில்லை. நாங்களாத்தான் தாரை வார்த்து குடுத்துட்டோம்.. எங்களுக்குன்னு ஒரு இமேஜ் இருக்குல்ல...
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-அக்-202123:47:44 IST Report Abuse
மலரின் மகள் நல்ல முடிவாகத்தான் இருக்கும். டாடா நிறுவனம் சிறப்பாக செயல்படும் நிறுவனம். நம்பிக்கைக்கு பாத்திரமானது. நிறைய சொத்துக்கள் உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு நிச்சயம் வரும். மேலும் பல நிறுவனங்கள் கூட்டணி அமைத்து நல்ல சேவைகளை வழங்க முன்வரும். ஒருவருக்கொருவர் இணைந்து இந்தியாவை வெளிநாடுகளுடன் இணைப்பதில் மிக பிரமாண்ட நெட்ஒர்க் கிடைக்கும். ஏர் இந்தியா நிறுவனம் மிகவும் சிறந்த நிறுவனம். அதை நடுத்தரத்திற்கும் கீழ்த்தட்டு மக்களுக்கானதாக நினைப்பது தவறு, தேசத்தின் பெருமையாக லுப்தான்சா எமிரேட்ஸ் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மிக குறுகிய காலத்தில் முன்னேறும். மிக பிரமாண்டமான நெட்ஒர்க் கொண்ட நிறுவனம். வெளிநாடுகளில் நல்ல நெட்ஒர்க் இருக்கிறது. மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு எந்த நிறுவனம் இதை எடுத்து நடத்தினாலும் நிச்சயமாக முடியும். அரசியல் தலையீடுகளாலும், பின்புறத்திலிருந்து திரைமறைவாக நடத்தப்படும் பல்வேறு சங்கதிகளாலும் நிறுவனத்தை லாபமீட்ட விடாமல் போட்டியில் சேர்னு அனைவரையும் துவம்சம் செய்து வானில் மிக அழகாக பவனி வரவேண்டிய நிறுவனத்தை சில அதிகார சக்திகள் தடுத்துவருகின்றன என்று பல பேச்சுக்கள் உண்டு. இப்போது தனியார் வசம் சென்றால் மிக உச்சத்தை நோக்கி செல்லும். தாராள மனப்போக்கில் உயர்வான சேவைகளில் முதலிடத்தில் இருந்த நிறுவனம் தான். தவறான பரப்புரைகளாலும் சில நேரதமதங்களை சில பல அழுத்தங்களால் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தினாழும் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும்படி செய்தாகிவிட்டது. நேரதமதம் சரி செய்யப்படக் கூடியதே. தாமதமாக செல்வதற்கு ஏற்ப வின்மணத்தை இயக்கவேண்டும் என்றால் என்ன செய்வது. அடுத்து மிகவும் முக்கியமாக பயண சீட்டு விற்பனைகள். அனைத்து ஏர்லைன்ஸ் டிக்கெட்களும் விற்றபின் தானிவர்களின் புக்கிங் நடக்கவே ஆரம்பிக்கும். அப்படி நடக்கும் வகையில் முதலில் டிக்கெட் விலை மிக மிக அதிகமாக ஏறத்தாழ ஒன்றரை மடைந்து முதல் இரண்டு மடங்கு வரை போட்டி நிறுவனங்களின் டிக்கெட் விலையை கூடுதலாக இருக்கும். ஒரு வாரத்திலிருந்து சில மணி நேரங்கள் முன்னம் வரையில் விலையை மற்ற நிறுவனங்களின் விலையை விட பாதியாக குறைத்து விற்பார்கள். அதில் எப்போதுமே ஐயப்பாடுகள் உண்டு கூர்ந்து கவனிப்போரும் அடிக்கடி பயணிப்போருக்கும். எடை அதிகம் எடுத்து செல்ல அனுமதிப்பார்கள். எல்லா ஏர்லைன்ஸ்களையும் விட என்றுமே அதிகப்படியான பொதிகளை இலவசமாக அனுமதிக்கும் ஒரே நிறுவனம் ஏர் இந்தியாதான். இந்தியாவின் 360 கோணத்திலும் அனைத்து நகரங்களையும் இணைக்ககிறார்கள். அனைத்து கண்டங்களுக்கு பறக்கும் ஒரே நிறுவனம் இது தான். தனியாரிடம் சென்ற உடனேயே சேவைகள் மேம்படும். டிக்கெட் விலை தாராளமாக போட்டி போட்டு கொண்டு இருக்கும். தனிநபர் சேவைகளை மிக அதிக அளவில் செய்வார்கள். பங்கு சந்தையில் பட்டியலிட்டால் நிச்சயம் வாங்க வேண்டிய நிறுவனத்தின் பங்கில் ஏர் இந்தியாவிற்கு முதலிடமிருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X