பொது செய்தி

இந்தியா

குப்பையில்லா நகரங்களே இலக்கு: பிரதமர்

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛ தூய்மை இந்தியா 2.0'' இயக்கத்தின் நோக்கம் குப்பையில்லாத நகரங்களே '' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.டில்லியில் நடந்த விழாவில், அனைத்து நகரங்களும் குப்பையில்லாததாகவும், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் தூய்மை பாரத் இயக்கம் 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களை நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது: குப்பையில்லா நகரங்களே
பிரதமர், மோடி, நரேந்திரமோடி, தூய்மை இந்தியா, நகரங்கள், குப்பை

புதுடில்லி: ‛‛ தூய்மை இந்தியா 2.0'' இயக்கத்தின் நோக்கம் குப்பையில்லாத நகரங்களே '' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த விழாவில், அனைத்து நகரங்களும் குப்பையில்லாததாகவும், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் தூய்மை பாரத் இயக்கம் 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களை நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: குப்பையில்லா நகரங்களே தூய்மை இந்தியா 2.0 இயக்கத்தின் நோக்கம் ஆகும். இந்த இரண்டாம் கட்டத்தில், கழிவுநீர் நிர்வாகத்தை மேம்படுத்துவதுடன், நகரங்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க செய்வதுடன், கழிவுநீர் நதிகளில் கலப்பதை தடுக்கவும் உறுதி செய்யப்படும்.


latest tamil news


இரண்டாம் கட்ட தூய்மை பணி அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றுவதில் முக்கியமான நடவடிக்கை ஆகும். அம்பேத்கர் மையத்தில் இந்த திட்டங்களை துவக்கி வைப்பது பெருமை அளிக்கிறது. நகர்ப்புறங்கள் வளர்ச்சி பெறுவது சமத்துவத்திற்கு முக்கியமானது என அவர் நம்பினார்.

இனி வரும் காலங்களில் மிட்டாய் காகிதங்களை யாரும் கீழே போடாமல் பாக்கெட்டில் வைத்து கொண்டு சென்று குப்பை தொட்டிகளில் போடுவார்கள். குப்பையை வெளியில் வீசக்கூடாது என பெரியவர்களை, குழந்தைகள் அறிவுறுத்துவார்கள். இளைஞர்கள் முன்முயற்சியை எடுக்கின்றனர். குப்பை மூலம் சிலர் சம்பாதிக்கிறார்கள். சிலர் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். கழிவுகளை பிரிப்பதிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.


latest tamil news



தூய்மை இந்தியா இரண்டாம் கட்டத்தில், நகர்ப்புறங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்படும். டில்லியில் நீண்ட காலமாக மலை போல் குவிந்துள்ள குப்பைகளும் அகற்றப்படும். இன்று இந்தியாவில் தினமும் 1 லட்சம் டன் குப்பைகள் கையாளப்படுகிறது. 2014ல் தூய்மை பிரசாரம் மேற்கொள்ளப்படும் வரை, 20 சதவீத குப்பைகள் தான் கையாளப்பட்டது. ஆனால், இன்று தினசரி 70 சதவீத குப்பைகள் கையாளப்படுகின்றன. இது 100 சதவீதமாக உயர்த்தப்படும். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
01-அக்-202117:08:16 IST Report Abuse
J.Isaac படித்த காரில் பயணம் செய்கிறவர்களே குப்பையை சாலைகளின் ஓரங்களில் வீசி செல்லுகிற பட்டணங்களில் தூய்மை வருமா? தூய்மை பணியாளர்களை முதலில் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் தூய்மை. உடலில் தூய்மை. பார்வையில் தூய்மை. நடத்தையில் தூய்மை. பேச்சில் தூய்மை. பின் நகரத்தில் தூய்மை வரும்.
Rate this:
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
01-அக்-202116:03:44 IST Report Abuse
Rajan நாட்டில் மிஞ்சி இருக்கும் காங்கிரஸ் யையும் தமிழகத்தில் திxxx கட்சிகளையும் யையும் ஒழித்தால் தான் உண்மையான தூய்மை இந்தியா ஆகும்.
Rate this:
Cancel
01-அக்-202115:37:56 IST Report Abuse
அப்புசாமி நகரக் குப்பையெல்லாம் கூட்டி கிராமத்துல கொட்டப் போறாங்கோ...அடல் 3.0 ல கிராம குப்பைகளை கூட்டி எங்கே கொடுவாங்களோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X