பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க மக்கள் இயக்கம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்ய, நாளை முதல் டிச., 31 வரை, அனைத்து ஊராட்சிகளிலும், மக்கள் திட்டமிடல் இயக்கம் துவக்கப்படும்,'' என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையில், 2022 - 23ம் ஆண்டுக்கான, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்தல் குறித்த ஆய்வு கூட்டம்,


சென்னை : ''தமிழகத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்ய, நாளை முதல் டிச., 31 வரை, அனைத்து ஊராட்சிகளிலும், மக்கள் திட்டமிடல் இயக்கம் துவக்கப்படும்,'' என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையில், 2022 - 23ம் ஆண்டுக்கான, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்தல் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்தது. இதில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:
வரும் 2022 - 23ம் நிதியாண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்ய, நாளை முதல் டிச., 31 வரை, 12 ஆயிரத்து, 525 கிராம ஊராட்சிகளிலும், மக்கள் திட்டமிடல் இயக்கம் துவக்கப்படும். ஊராட்சியில் உள்ள வள ஆதாரங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஊராட்சிகளில் உள்ள வள ஆதாரங்கள், தேவைகள், பணிகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பிற துறை ஒருங்கிணைப்பு போன்றவற்றை விவாதித்து, ஒரு முழுமையான திட்டம் தயார் செய்ய, மக்கள் திட்டமிடல் இயக்கம் உதவியாக இருக்கும். கிராம ஊராட்சிக்கு மட்டுமல்லாது, வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிக்கும், ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் தயார் செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.

ஊரக வளர்ச்சித் துறை செயலர் கோபால், துறை இயக்குனர் பிரவீன் பி நாயர் ஆகியோரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X