கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரியில் வார்டு ஒதுக்கீடு உயர் நீதிமன்றம் அதிருப்தி

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை : புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில், வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. குறைபாடுகளை சரிசெய்யவில்லை என்றால், தேர்தலை நிறுத்த வேண்டியது வரும் எனவும் எச்சரித்துள்ளது.புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி நகராட்சியில், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு


சென்னை : புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில், வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. குறைபாடுகளை சரிசெய்யவில்லை என்றால், தேர்தலை நிறுத்த வேண்டியது வரும் எனவும் எச்சரித்துள்ளது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி நகராட்சியில், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில், ஆதிதிராவிட சமூகத்தினரின் எண்ணிக்கை குறைவு.அதிக எண்ணிக்கையில் உள்ள வார்டுகளை ஒதுக்காமல், குறைவான எண்ணிக்கையில் உள்ள வார்டுகளை ஒதுக்கி உள்ளனர். இதுகுறித்து, மாநில தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை. எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விதிகளின்படி, ஆதிதிராவிடர்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் என்.மனோகரன், மாநில தேர்தல் ஆணையம் சார்பில், வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் ஆஜராகினர்.புதுச்சேரி அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், 2011 ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், சுழற்சி முறையில் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

இதையடுத்து, சுழற்சி முறை ஒதுக்கீடு என்பது விதிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்; அரசாணை அடிப்படையில் இருக்கக் கூடாது என, முதல் பெஞ்ச் தெரிவித்தது. மற்றொரு மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, 15 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து, மூன்று மாதங்களுக்கு பின் தேர்தல் நடத்தலாம்,'' என்றார்.
அதைத்தொடர்ந்து, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கிய அடிப்படை உள்ளிட்ட பல முரண்பாடுகள், கவனத்துக்கு வந்துள்ளன. இதுகுறித்து, புதுச்சேரி அரசும், மாநில தேர்தல் ஆணையமும் பதில் அளிக்க வேண்டும்' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை, இன்றைக்கு தள்ளி வைத்தது. குறைபாடுகளை சரிசெய்யவில்லை என்றால், தேர்தலை நிறுத்த வேண்டியது வரும் எனவும் முதல் பெஞ்ச் எச்சரித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X