மகளை வெட்டி விட்டு தந்தை தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளை வெட்டி விட்டு தந்தை தற்கொலை

Added : அக் 01, 2021
Share
திருச்சி : திருச்சியில், மகளை அரிவாளால் வெட்டி விட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அருகே, அதவத்துார், சக்தி நகரை சேர்ந்தவர் மூர்த்தி,72. இவரது முதல் மனைவி பிருந்தாதேவி இறந்து விட்டார். இரண்டாவது மனைவி லதாவுக்கு பிரபாகரன்,32, என்ற மகனும் கீர்த்தனா,27, என்ற மகளும் உள்ளனர்.லதாவும், பிரபாகரனும் உறவினர் வீட்டு

திருச்சி : திருச்சியில், மகளை அரிவாளால் வெட்டி விட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அருகே, அதவத்துார், சக்தி நகரை சேர்ந்தவர் மூர்த்தி,72. இவரது முதல் மனைவி பிருந்தாதேவி இறந்து விட்டார். இரண்டாவது மனைவி லதாவுக்கு பிரபாகரன்,32, என்ற மகனும் கீர்த்தனா,27, என்ற மகளும் உள்ளனர்.லதாவும், பிரபாகரனும் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்று விட்டு, நேற்று மாலையில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது, வீட்டில் மூர்த்தி துாக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அருகில், மகள் கீர்த்தனா முகத்தில் வெட்டுக் காயங்களுடன் மயங்கிக் கிடந்துள்ளார். ரத்தக் கறையுடன் அரிவாளும் கிடந்துள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம் பேட்டை போலீசார், கீர்த்தனாவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக, மகளை வெட்டி விட்டு, மூர்த்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X