பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: மாவட்டம் முழுவதும் 458.40 மி.மீ., பதிவு

Added : அக் 01, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பகலில், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, முதியவர் முதல், சிறியவர்கள் வரை, வெளியே செல்ல முடியாமல், வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும், இரவு நேரங்களில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், அவ்வப்போது லேசான மற்றும் கனமழை பெய்து, மக்களையும், விவசாயிகளையும்,


நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பகலில், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, முதியவர் முதல், சிறியவர்கள் வரை, வெளியே செல்ல முடியாமல், வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும், இரவு நேரங்களில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், அவ்வப்போது லேசான மற்றும் கனமழை பெய்து, மக்களையும், விவசாயிகளையும், மகிழ்ச்சி அடைய செய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று பகலில், வெயில் வாட்டி வதைத்தது. அதனால், மழை வரும் என, மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி, இரவில், மாவட்டம் முழுவதும், கனமழை பெய்தது.விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், ஆங்காங்கே மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, பள்ளிபாளையம் பகுதியில், அன்னை சத்யா நகர், குடிசைமாற்று வாரிய பகுதி, கண்டிப்புதுார், பழைய போலீஸ் ஸ்டேசன் வீதி, வசந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததாலும், மழைநீர் குடியிருக்குள் புகுந்தது என, புகார் எழுந்துள்ளது.
மாவட்டம் முழுவதும், இன்று, காலை, 7:00 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:எருமப்பட்டி- 20, குமாரபாளயம்- 71.40, மங்களபுரம்- 7, மோகனுார்- 36, நாமக்கல்- 9, ப.வேலுார்- 24, புதுச்சத்திரம்- 45, ராசிபுரம்- 72, சேந்தமங்கலம்- 4, திருச்செங்கோடு- 92, கலெக்டர் அலுவலகம்- 7, கொல்லிமலை--- 71 என, மொத்தம், 458.40 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X