சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

Added : அக் 01, 2021
Share
Advertisement
கரூர்: கரூர், கிருஷ்ணராயபுரம் சிவலிங்கபுரம் பகுதியில் உள்ள நிலத்தில் மண் அள்ளப்பட்டதால், பள்ளமாக மாறியது. நேற்று இரவு முதல் பெய்த கன மழையை அடுத்து, அந்த பகுதியில் நீர் தேங்கி உள்ளது. இதே பகுதியைச் சார்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான ஆறுமுகம் மகன்கள் வசந்த் (11), கவீன் (எ) மயில்வாகனம் (10), அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் காசிராஜ் மகன் நவீன் குமார் (13) ஆகியோர் ஆடு


கரூர்: கரூர், கிருஷ்ணராயபுரம் சிவலிங்கபுரம் பகுதியில் உள்ள நிலத்தில் மண் அள்ளப்பட்டதால், பள்ளமாக மாறியது. நேற்று இரவு முதல் பெய்த கன மழையை அடுத்து, அந்த பகுதியில் நீர் தேங்கி உள்ளது. இதே பகுதியைச் சார்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான ஆறுமுகம் மகன்கள் வசந்த் (11), கவீன் (எ) மயில்வாகனம் (10), அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் காசிராஜ் மகன் நவீன் குமார் (13) ஆகியோர் ஆடு மேய்க்க அந்த பகுதிக்கு சென்றனர். தேங்கிய மழைநீரில் இறங்கிய ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கினார். அந்த சிறுவனை காப்பாற்ற முயன்ற மற்ற இருவரும் தண்ணீரில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் வெங்கடேஷ், குளித்தலை சரக டிஎஸ்பி கீதாஞ்சலி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X