பொது செய்தி

தமிழ்நாடு

வம்பு செய்பவர்கள் மீது சாட்சியுடன் வழக்கு பதிவு செய்ய கேமரா: போலீசாருக்கு பொருத்தல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
வேலுார் : வம்பு செய்பவர்கள் மீது சாட்சியுடன் வழக்கு பதிவு செய்ய காலர் ஓர்ன் கேமரா வேலுார் மாவட்ட போலீசார் தோள் பட்டையில் பொருத்தப்பட்டுள்ளது.வேலுார் மாவட்டத்தில், 30 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு யாராவது போலீசாரிடம் ஆபாசமாக பேசி வம்பு செய்து தகராறில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் போது போதிய சாட்சிகள் இல்லாமல் திணறுகின்றனர். இதனால் காலர் ஓர்ன்


வேலுார் : வம்பு செய்பவர்கள் மீது சாட்சியுடன் வழக்கு பதிவு செய்ய காலர் ஓர்ன் கேமரா வேலுார் மாவட்ட போலீசார் தோள் பட்டையில் பொருத்தப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டத்தில், 30 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு யாராவது போலீசாரிடம் ஆபாசமாக பேசி வம்பு செய்து தகராறில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் போது போதிய சாட்சிகள் இல்லாமல் திணறுகின்றனர். இதனால் காலர் ஓர்ன் கேமராக்கள் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு மூன்று வீதம் 30 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாகாயம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் இந்த கேமராவை இன்று போலீசாரின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

அப்போது அவர் கூறியதாவது: காலர் ஓர்ன் கேமராவை போலீசார் தங்கள் தோள் பட்டையில் பொருத்திக் கொண்டு பிரச்சனை நடக்கும் இடங்களில் சென்றும் வாகன சோதனைக்கு சென்று விசாரிக்கும் போது, அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை இந்த கேமராவில் வீடியோ, ஆடியோவாக பதிவாகி விடும். ஒரு முறை பதிவான காட்சிகளை அழிக்க முடியாது. இதனால் போலீசாரிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கேமரா சாட்சியை கொண்டு தண்டனை பெற்றுத் தர முடியும். காலர் ஓர்ன் கேமராக்கள் சென்னை, கோவை போலீசாருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X