பொது செய்தி

இந்தியா

இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது: பெங்களூரு ஓட்டல் செய்த காரியம்!

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
பெங்களூரு: இட்லியை காலங்காலமாக சாம்பாரில் ஊறவிட்டு கையால் பிசைந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் நிலையில், பெங்களூருவில் ஒரு உணவகம் புதுமையை புகுத்துகிறேன் என்ற பெயரில் குச்சி ஐஸ் போன்று, குச்சியில் இட்லியை வார்த்து தருகின்றனர். சிலர் இந்த முயற்சியை வரவேற்றாலும், பலரும் இதனை விமர்சிக்கின்றனர்.இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பிரத்யேக உணவு கலாசாரம் இருந்தாலும்,
idly, இட்லி, சட்னி, பெங்களூரு ஓட்டல், காரியம்

பெங்களூரு: இட்லியை காலங்காலமாக சாம்பாரில் ஊறவிட்டு கையால் பிசைந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் நிலையில், பெங்களூருவில் ஒரு உணவகம் புதுமையை புகுத்துகிறேன் என்ற பெயரில் குச்சி ஐஸ் போன்று, குச்சியில் இட்லியை வார்த்து தருகின்றனர். சிலர் இந்த முயற்சியை வரவேற்றாலும், பலரும் இதனை விமர்சிக்கின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பிரத்யேக உணவு கலாசாரம் இருந்தாலும், எல்லா மாநிலங்களிலும் கிடைக்கக் கூடிய சிற்றுண்டியாக இட்லி இருக்கும். வட மாநிலங்கள் சிலவற்றில் அதற்கு வேறு பெயர், வடிவம் இருக்கும். இட்லியில் புரோட்டீன், நார்ச்சத்து, கார்போ ஹைட்ரேட் என சரிவிகிதமாக உள்ளது. சாம்பார், தேங்காய் சட்னியுடன் சாப்பிடும் போது புரதச் சத்து அதிகம் கிடைக்கும். இந்நிலையில் பெங்களூருவில் ஒரு ஓட்டல் நிறுவனம் ஐஸ் குச்சியில் இட்லியை வார்த்து புதுமையை புகுத்தியிருப்பதாக கூறியுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.


latest tamil news


மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட பிரபலங்களும் அந்த குச்சி இட்லி புகைப்படத்தை பகிர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.விருப்பத்திற்குரிய ஒரு உணவை இப்படி கொலை செய்யாதீர்கள், இதெல்லாம் தேவையற்ற வீண் முயற்சி என பலர் கருத்து கூறியுள்ளனர். ஏற்கனவே பல டிஷ்களை இப்படி தான் புதுமையை புகுத்துகிறேன் என அதன் உண்மையான சுவையை அழித்தார்கள் இப்போது இட்லியை கையிலெடுத்துள்ளார்கள் என ஒருவர் கூறியுள்ளார். இட்லி என்றால் வட்டமாக தான் இருக்க வேண்டும், வேறு வடிவத்தை எல்லாம் ஏற்க முடியாது என சிலர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
02-அக்-202106:00:29 IST Report Abuse
Indhuindian அடுத்து இட்டிலியை சாம்பாரோடு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து திரவமாக செய்து அதை ஒரு பெரிய கண்ணாடி டம்பளரில் ஸ்ட்ரா போட்டு குடுக்கலாம் அதை குடிக்கவும் வரிசை கட்டி நிற்கும் எப்படியோ புதுமை என்ற பெயரில் கல்லா கட்டினால் சரி நாய் வித்த காசு குலைக்குமா அல்லது பூ வித்த காசு மனக்குமா
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
02-அக்-202104:07:21 IST Report Abuse
தமிழன் கொஞ்சமா மாவு செலவாகும், நல்லா காசு பாக்கலாம். அங்க இட்லில ரவை சேப்பாங்க, நம்ம இட்லி டேஸ்டு வராது.
Rate this:
Cancel
Mrs. Marie-Thérèse Evariste - Paris,பிரான்ஸ்
02-அக்-202101:27:12 IST Report Abuse
Mrs. Marie-Thérèse Evariste All trees are uprooted and are replaced by huge, big , big tower buildings. Moreover, Government discourages the use of plastics. In such a situation, where will these people find wooden pieces or plastics to make sticks ? I doubt : ........ "இட்லி preparation" would it be really possible to prepare in large / huge quantities in hotels ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X