புலி தாக்கி மேலும் ஒருவர் பலி: மக்கள் சாலை மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புலி தாக்கி மேலும் ஒருவர் பலி: மக்கள் சாலை மறியல்

Added : அக் 01, 2021
Share
ஊட்டி: நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சந்திரன், 51, என்பவரை 24ம் தேதி புலி தாக்கி கொன்றது. புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அந்த புலி, அங்கிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ளமசினங்குடி கிராமத்திற்கு வந்தது. இது குறித்து தேடுதல் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து, ஒரு இடத்தில் புலியை தேடும்
புலி தாக்கி மேலும் ஒருவர் பலி: மக்கள் சாலை மறியல்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சந்திரன், 51, என்பவரை 24ம் தேதி புலி தாக்கி கொன்றது. புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அந்த புலி, அங்கிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ளமசினங்குடி கிராமத்திற்கு வந்தது. இது குறித்து தேடுதல் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து, ஒரு இடத்தில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதே பகுதியில் வேறு இடத்தில் மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாதவன் என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவரை அடித்து கொன்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, புலியை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.அதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X