பொது செய்தி

இந்தியா

ஆப்கனின் நெருக்கடி மிகுந்த சூழல் குறிப்பிடத்தகுந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும்: ஜெய்சங்கர்

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: 'ஆப்கனுக்கு மிக அருகில் நாம் இருப்பதால், அங்கு நடைபெறும் நெருக்கடி மிகுந்த சூழல், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பின்விளைவுகளை நமக்கும் ஏற்படுத்தும்' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்க வியூக கூட்டாண்மை மன்றத்தின் ஆண்டு மாநாடு நேற்று (செப்., 30) நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

புதுடில்லி: 'ஆப்கனுக்கு மிக அருகில் நாம் இருப்பதால், அங்கு நடைபெறும் நெருக்கடி மிகுந்த சூழல், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பின்விளைவுகளை நமக்கும் ஏற்படுத்தும்' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.



latest tamil news




இந்தியா - அமெரிக்க வியூக கூட்டாண்மை மன்றத்தின் ஆண்டு மாநாடு நேற்று (செப்., 30) நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: 'ஆப்கன் பயங்கரவாதத்திற்கு பயன்பட்டுவிட வாய்ப்புள்ளது' என, எழுப்பப்படும் சந்தேகங்களில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரே நிலைபாடுதான்.


latest tamil news



ஆப்கனில் தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசுக்கு அங்கீகாரம் வழங்குவதில் இந்தியாவுக்கு எந்த அவசரமும் இல்லை. ஆப்கனில் அனைவருக்குமான அரசு அமைக்கப்படுமா? மற்ற நாடுகளை எதிர்க்க, ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு பயன்பட்டுவிடக்கூடாது என்பதே இந்தியாவின் கவலைகளாக உள்ளது.

ஆப்கனுக்கு மிக அருகில் நாம் இருப்பதால், அங்கு நடைபெறும் நெருக்கடி, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பின்விளைவுகளை நமக்கும் ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202119:39:03 IST Report Abuse
அப்புசாமி இப்பிடி பூடகமா, பூசி மெழுகி கருத்து சொல்லிட்டா போறும். பின்னாடி எப்பிடி வேணும்னாலும் விளக்கிடலாம்.இதோ என் விளக்கம்.ஆப்கான் அரசை சீனா ஆதரிச்சா நமக்கு நஷ்டம்.ஆப்கான் அரசை அமெரிக்கா எதிர்க்கலேன்னா நமது வெளிநாட்டு கொள்கைக்கு அடி. நமக்கு நஷ்டம்.ஆப்கானிஸ்தானை நாம ஆதரிக்கலேன்னா, சீனா பூந்து விளையாடும். நமக்கு நஷ்டம். ஆப்கானிஸ்தானை நாம ஆதரிச்சா நமக்கு தார்மீக நஷ்டம். சீன வட கொரியாவை வளர்த்து உடற மாதிரி, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தானை வளர்த்து நமக்கு எதிராக திருப்பும். சீனாவை பொருளாதார ரீதியா எதிர்க்கும் வல்லமை நமக்கு இல்லை. இன்னும் கொஞ்ச நாளக்கி நாம இப்பிடியே பேசிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
01-அக்-202119:04:54 IST Report Abuse
SUBBU Exam எழுதியாச்சு Result மட்டுமே பாக்கி.பாவம் பாக்கி
Rate this:
Cancel
raja - madurai,இந்தியா
01-அக்-202118:58:09 IST Report Abuse
raja போட்டோல இறக்குறவனுகள பாத்தா அப்பிடியே கொள்ளைக்காரனுக மாதிரியே இருக்கானுங்க.1960 இல் ஆப்கன், இன்று ஆப்கன் சம்மந்தமே இல்ல. எல்லா நாடும் வளருது இது மட்டும் தேயுது. ஆப்கன் மக்கள் ரஸ்சியனுக்கும், அமெரிக்கனுக்கும் நன்றி சொல்லி விழா எடுக்குற அளவுக்கு கடமைப்பட்டுள்ளார்கள். இதுல இவனுங்களுக்கு இந்தியாவோட மோதல் போக்கு வேற.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X