வடகொரியாவில் ஒரே மாதத்தில் 4 ஏவுகணை சோதனை

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பியாங்யாங்: சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளை மீறி, கடந்த ஒரே மாதத்தில் 4 ஏவுகணை சோதனைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், வடகொரியா அதிநவீன ஆயதங்களைத் தயாரித்து வருகிறது. குறிப்பாக தனது போர் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், ஏவுகணை, ரேடார் போன்றவற்றை தயாரித்து வருகிறது.இந்நிலையில் நேற்று (செப்., 30) ஏவுகணையை

பியாங்யாங்: சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளை மீறி, கடந்த ஒரே மாதத்தில் 4 ஏவுகணை சோதனைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.



latest tamil news



அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், வடகொரியா அதிநவீன ஆயதங்களைத் தயாரித்து வருகிறது. குறிப்பாக தனது போர் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், ஏவுகணை, ரேடார் போன்றவற்றை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (செப்., 30) ஏவுகணையை இடைமறித்து தாக்கும் வகையிலான அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.


latest tamil news


சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளை மீறி, கடந்த மாதத்தில் மட்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகள், அணு சக்தி திறன் கொண்ட ஏவுகணை என, நான்கு ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதித்திருக்கிறது. இது, உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
01-அக்-202122:00:39 IST Report Abuse
Vittalanand இரும்பு பிடித்த கைகளும் சொறி பிடித்த கைகளும் சும்மா இருக்காது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-அக்-202120:55:23 IST Report Abuse
Ramesh Sargam வேதாளம் (வடகொரியா) மீண்டும் முருங்கை மரம் ஏற ஆரம்பித்துவிட்டது. ஆம் நான் அந்த வடகொரியா அதிபரைத்தான் குறிப்பிடுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X