டிரம்புக்கு நேரெதிராக வடகொரியா விவகாரத்தை சுமூகமாகக் கையாளும் பைடன்..!

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் கிம். இனி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபடப்போவதில்லை என்றும் சோதனைக் கூடங்களை மூடப்போவதாகவும் தெரிவித்து இருந்தார்.ஆனால் வெளியுலகுக்குத் தெரியாமல்
அமெரிக்கா, வடகொரியா, பைடன்,

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் கிம். இனி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபடப்போவதில்லை என்றும் சோதனைக் கூடங்களை மூடப்போவதாகவும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் வெளியுலகுக்குத் தெரியாமல் மறைமுகமாக வடகொரியா நீண்ட காலமாகவே அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் குற்றம்சாட்டி வந்தன. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கிம் உடன் அணுக்கமாகச் செல்லவே விரும்புகிறார்.

இதனிடையே தற்போது ஓர் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பில் வடகொரியா ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான செய்தி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தது அமெரிக்காவின் தந்திரம் என்று விமர்சித்திருந்தார் கிம். இதுதொடர்பாக தற்போது பேட்டி அளித்துள்ள அமெரிக்க மாகாணச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றுடன் இணைந்து வடகொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜோ பைடன் அரசு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சோதனையை வடகொரியா நிறுத்திக்கொள்ள வேண்டுமானால் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வடகொரியாவுக்கு விதித்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் தரப்பு தெரிவித்திருந்ததாக தென்கொரியா கூறியது.

கடந்த 40 - 50 ஆண்டுகளாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ரஷ்யாவின் பிடியிலிருந்து கொரியாவை மீட்க அமெரிக்க படைகள் போர் புரிந்தன. இதனையடுத்து தென்கொரியா என்ற புது நாடு உருவாகியது.

இன்றுவரை அமெரிக்காவின் கைப்பாவையாகவே தென்கொரிய அதிபர்கள் செயல்பட்டு வருவதாக வடகொரியா நினைக்கிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவின் பிடியில் சிக்கியிருக்கும் தென்கொரியாவை தனதாக்கிக்கொண்டு ஒருங்கிணைந்த கொரியாவை உருவாக்க கிம் ஜாங் உன் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.


latest tamil news


இதற்காகவே அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளையும் அமெரிக்காவையும் தனது அணு ஆயுத சோதனை மூலம் வட கொரியா அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
02-அக்-202106:47:34 IST Report Abuse
Girija அனுகூல சத்ரு பிடன் கமலா ஹாரிஸ், ஆப்கன் பிரச்னையை ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யாவிடம் விட்டிருக்கலாம் . நடுவில் மூக்கை நுழைத்து அரசியல் செய்து தனக்கு தானே ட்வின் டவர் தகர்ப்பு ஆப்பு வைத்துக்கொண்டது. இன்று ஆப்கன் தாலிபான்களால் இந்தியாவிற்கு மிகுந்த ஆபத்தை உண்டாகும் வகையில் பிடன் மற்றும் பாட்டி செயல்படுகின்றனர். கமலா பாட்டி ஏற்கனவே காஸ்மீர் விவகாரத்தில் பாக்கிற்கு ஆதரவாக இந்தியா, முஸ்லீம் என்று பிரித்து பேசிவிட்டுட்டு, அமெரிக்கா வாழ், இந்தியர் ஓட்டுக்காக தஞ்சாவூரில் கோவிலில் மணி அடித்தார். . அவர் கிறித்துவராக மாறி இபோது சமண மதத்தில் உள்ளார் .நம்ம ஜனங்களும் கமலா ஜெயித்தால் நமக்கும் அமெரிக்காவில் க்ரீன் கார்டு , நம்ம ரேஷன் பச்சை கார்டு மாதிரி கிடைக்கும் என்று, வழக்கம் போல் தங்கள் தலையிலேயே தேங்காய் உடைத்துக்கொண்டனர். தற்போது பஞ்சாபில் இந்திராவால் துவக்கப்பட்ட பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்குகிறது . சித்து பாகிஸ்தான் ஆதரவாளர், ஏற்கனவே ஒரு கொலை கேசில் சிக்காமல் தப்பியவர். மறைமுகமாக வெளிநாட்டில் இருக்கும் காலிஸ்தான் புரட்சியாளர்களை தாலிபான்களுடன் கூட்டு சேர்த்து பதவிக்காக எடை வேண்டுமானாலும் செய்வார் .
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-அக்-202120:50:02 IST Report Abuse
Ramesh Sargam யாரை நம்புவதென்றே தெரியவில்லை. எல்லாம் ஒரே புளுகு பேர்வழிகள்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
01-அக்-202119:52:33 IST Report Abuse
 Muruga Vel சீன அரசு சப்போர்ட் இந்த கிம்முக்கு உண்டு ..
Rate this:
SANKAR - ,
01-அக்-202121:19:14 IST Report Abuse
SANKARTrump met Kim three times directly at the place and dates mentioned by Kim...never done by any other US President...handled him friendly and that fellow mellowed and became friendly.It was Biden who openly d that he would not follow Trumps approach.Korea d by liberating it from clutches of Russia?! what nonsense! it was CHINA.News all wrong.Who composed this?!...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X