பசுமை தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆய்வு

Added : அக் 01, 2021
Share
கரூர்: அமராவதி ஆற்றில் தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கரூர் அமராவதி ஆற்றில் கலக்கப்படும் சாயக் கழிவுகளால் ஆறு மாசடைந்து மக்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மதுரை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 'சாயப்பட்டறை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு

கரூர்: அமராவதி ஆற்றில் தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கரூர் அமராவதி ஆற்றில் கலக்கப்படும் சாயக் கழிவுகளால் ஆறு மாசடைந்து மக்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மதுரை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 'சாயப்பட்டறை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் கலக்க விடும் ஆலைகள் குறித்து ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்கள் கார்த்தியேன், மகிமா தலைமையில் நேற்று கரூரில் ஆய்வு நடந்தது. அதன்படி, அமராவதி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள சாயப்பட்டறைகள், தொழிற் சாலைகளை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பிறகு முழுமையான அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X