கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கற்போம் எழுதுவோம்' விழிப்புணர்வு முகாம்

Added : அக் 01, 2021
Share
குளித்தலை: அய்யர்மைலை, தண்ணீர் பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் கல்வி பயிலாத குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் கல்வி கற்பதன் அவசியம் குறித்து சமுதாய விழிப்புணர்வு

குளித்தலை: அய்யர்மைலை, தண்ணீர் பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் கல்வி பயிலாத குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் கல்வி கற்பதன் அவசியம் குறித்து சமுதாய விழிப்புணர்வு முகாம் நடந்தது. பஞ்., தலைவர் பாப்பாத்தி தலைமை வகித்தார். குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் ராஜேஸ்வரி பேசினார். தண்ணீர்பள்ளி யூனியன் நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் லில்லி சகாய சுந்தரி தலைமை வகித்தார். குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி தொடங்கி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X