விழிப்புணர்வு போட்டி: கலெக்டர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு போட்டி: கலெக்டர் தகவல்

Added : அக் 01, 2021
Share
கரூர்: 'எய்ட்ஸ், காசநோய் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்' என கலெக்டர் பிரபு சங்கர் பேசினார்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, 'புதிய இந்தியா- 75 செயல்திட்டம்'

கரூர்: 'எய்ட்ஸ், காசநோய் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்' என கலெக்டர் பிரபு சங்கர் பேசினார்.


கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, 'புதிய இந்தியா- 75 செயல்திட்டம்' என்ற தலைப்பில், எச்.ஐ.வி., காசநோய், தன்னார்வ ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ , மாணவியருக்கு, ஓவியப் போட்டியும், கல்லூரிகளில் வினாடி- வினா போட்டியும் நடத்தப்பட உள்ளன. போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X