வழித்தடம் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து பாதிப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலையோர பகுதிகளை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரவக்குறிச்சி நகர் பகுதியில் தாராபுரம் சாலையில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு வழித்தடங்களில் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு பகுதியிலிருந்து வரும் கனரக

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலையோர பகுதிகளை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரவக்குறிச்சி நகர் பகுதியில் தாராபுரம் சாலையில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு வழித்தடங்களில் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு பகுதியிலிருந்து வரும் கனரக வாகன ஓட்டிகளும் இந்த வழித்தடத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை அப்பகுதியில் ஓட்டல்கள், மளிகை கடை, பேக்கரி, இறைச்சிக்கடைகள் போன்ற பலதரப்பட்ட கடை வைத்துள்ள நபர்கள் சாலையோர பகுதியை ஆக்கிரமித்து கட்டமைப்பு ஏற்படுத்தி உள்ளனர். அப்பகுதிக்கு வந்து செல்லும் வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது வழி விட வழியின்றி வாகன ஓட்டிகள் தடுமாறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து தடைபடுகிறது. எனவே, அரவக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் தனிநபர்கள் கட்டமைப்புகள் அகற்றப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X