பஸ்கள் நிற்காததால் பயணிகள் பாதிப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
கரூர்: க.பரமத்தியில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் தவித்து வருகின்றனர். கரூர்- கோவை நெடுஞ்சாலையில், 18 வது கி.மீ., தூரத்தில் க.பரமத்தி உள்ளது. இந்த பகுதியில் மத்திய, மாநில அரசு அலுவலகம், வங்கிகள், தனியார் கல்லூரிகள், அரசு, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், க.பரமத்தியில் வேலை நிமித்தமாக தினமும், 1,000க்கும் மேற்பட்டவர்கள் கரூர் உட்பட பல்வேறு ஊர்களுக்கு

கரூர்: க.பரமத்தியில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் தவித்து வருகின்றனர். கரூர்- கோவை நெடுஞ்சாலையில், 18 வது கி.மீ., தூரத்தில் க.பரமத்தி உள்ளது. இந்த பகுதியில் மத்திய, மாநில அரசு அலுவலகம், வங்கிகள், தனியார் கல்லூரிகள், அரசு, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், க.பரமத்தியில் வேலை நிமித்தமாக தினமும், 1,000க்கும் மேற்பட்டவர்கள் கரூர் உட்பட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள், கரூர், கோவை, திருப்பூர், செல்ல, க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் இருந்து புறப்பட வேண்டும். பகல் நேரத்தில் ஒரு சில பஸ்கள் மட்டும் நின்று செல்கின்றன. இரவு நேரத்தில் கோவை, திருப்பூர் மற்றும் கரூரில் இருந்து செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுவது இல்லை. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். பகல் நேரங்களில் தனியார், டவுன் பஸ்கள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் சமாளித்து கொள்கின்றனர். இரவு நேரங்களில் டவுன் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்படுவதல், புறநகர் பஸ்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X