பொது செய்தி

தமிழ்நாடு

லத்துவாடி பஞ்.,வார்டு உறுப்பினர்கள் தர்ணா

Added : அக் 01, 2021
Share
Advertisement
நாமக்கல்: லத்துவாடி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மோகனூர் ஒன்றியம் லத்துவாடி ஊராட்சி தலைவராக பரமேஸ்வரி என்பவர் உள்ளார். கணவாய்பட்டி, குடித்தெரு, நல்லையன்கவுணடம்புதூர், நல்லையன்புதூர், தொட்டிப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட, ஒன்பது வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று, ஊராட்சி மன்றதில் மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

நாமக்கல்: லத்துவாடி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மோகனூர் ஒன்றியம் லத்துவாடி ஊராட்சி தலைவராக பரமேஸ்வரி என்பவர் உள்ளார். கணவாய்பட்டி, குடித்தெரு, நல்லையன்கவுணடம்புதூர், நல்லையன்புதூர், தொட்டிப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட, ஒன்பது வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று, ஊராட்சி மன்றதில் மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அப்போது குடிநீர் பிரச்னை உள்ளிட்டவை குறித்து மற்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இது குறித்து தலைவர் பரமேஸ்வரி பதிலளிக்காமல் சென்று விட்டார். இதனால், 'பி.டி.ஓ., விடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தலைவருக்கு பதில் அவரது கணவர் தான் அதிகாரம் செலுத்தி வருகிறார். பல நாட்களாக இங்குள்ள வார்டுகளில் குடிநீர் பிரச்னை உள்ளது. அதனை சீரமைக்க மறுக்கின்றனர். மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பியதால் அறையை பூட்டி விட்டு தலைவர் வெளியேறி விட்டார். கலெக்டர் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, துணைத் தலைவர் சரவணன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள், பஞ்., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X