பொது செய்தி

தமிழ்நாடு

39 குடும்பத்தினரின் நிலம் விவகாரம்: மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை

Added : அக் 01, 2021
Share
Advertisement
நாமக்கல்: இடம் பெயர்ந்த, 39 குடும்பத்தாரின் நிலம் விதிமுறை மீறி பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தினார்.நாமக்கல் மாவட்டம் கார்கூடல்பட்டி பகுதியில், 1933ல் குறிப்பிட்ட பிரிவு மக்கள், 39 பேருக்கு அரசு சார்பில், 250 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அந்த நிலத்தை தனி நபர்கள் சிலர் விதிமுறைகளை மீறி பட்டா மாற்றம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நாமக்கல்: இடம் பெயர்ந்த, 39 குடும்பத்தாரின் நிலம் விதிமுறை மீறி பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தினார்.


நாமக்கல் மாவட்டம் கார்கூடல்பட்டி பகுதியில், 1933ல் குறிப்பிட்ட பிரிவு மக்கள், 39 பேருக்கு அரசு சார்பில், 250 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அந்த நிலத்தை தனி நபர்கள் சிலர் விதிமுறைகளை மீறி பட்டா மாற்றம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட, 39 குடும்பத்தினரும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர். தற்போது அவர்களின் வாரிசுகள் அந்த நிலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக வைரமணி என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் இருதரப்பினரிடமும் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி விசாரணை நடத்தினார். பின்னர் இருதரப்பினரும் தங்களின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அவரிடம் அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்களின் சட்ட ஆலோசகரும், ஐகோர்ட்டு வக்கீலுமான முத்துகிருஷ்ணன் கூறியதாவது: இதில், 39 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட, 250 ஏக்கர் நிலம் தொடர்பான தாய் பத்திரங்களை பரிசீலனை செய்து, விதிமீறிய பட்டா மாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கிராம கணக்கு மற்றும் தாலுகா கணக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து, பின்தங்கிய மக்களுக்கு வழங்கிய பஞ்சமி நிலத்தை மீட்டு உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X