பொது செய்தி

தமிழ்நாடு

நூற்பாலையில் பணி; பெண் தொழிலாளர் மீட்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே வெப்படையில் ஏராளமான நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பணி புரிகின்றனர். இதில் ஒரு நூற்பாலையில் சம்பளம் வழங்காமல் கொத்தடிமை போல நடத்துவதாக, ஈரோட்டில் உள்ள தன்னார்வலர் நிறுவனத்திற்கு தகவல் வந்தது. அந்த நிறுவனத்தின் புகாரின் பேரில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., இளவரசி மற்றும் வருவாய் துறை

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே வெப்படையில் ஏராளமான நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பணி புரிகின்றனர். இதில் ஒரு நூற்பாலையில் சம்பளம் வழங்காமல் கொத்தடிமை போல நடத்துவதாக, ஈரோட்டில் உள்ள தன்னார்வலர் நிறுவனத்திற்கு தகவல் வந்தது. அந்த நிறுவனத்தின் புகாரின் பேரில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., இளவரசி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நூற்பாலையில் நேற்று ஆய்வு செய்து, வடமாநில பெண் தொழிலாளர்களை மீட்டனர். இதுகுறித்து, வருவாய் துறையினர் கூறியதாவது: வெப்படை அருகே ஒரு நூற்பாலையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த, 16 பெண்கள் கடந்த மூன்று மாதமாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ஏஜன்ட் மூலமாக இங்கு வேலைக்கு வந்துள்ளனர். வேலை செய்யும் இடத்திலேயே தங்கியுள்ளனர். அவர்களுக்கு சம்பளம் தராமல் வேலை மட்டும் வாங்கி கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. தொடர்ந்து ஆலைக்கு சென்று விசாரித்து அவர்களை மீட்டோம். தொடர்ந்து ஆய்வு பணியும், விசாரணையும் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X