பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் 'நோ புட் வேஸ்ட்' தொண்டு நிறுவன சேவை துவக்கம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், பள்ளி, கல்லூரி விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை, உணவு பதார்த்தங்களை, முழுமையாக செலவு செய்ய முடியாமல் மிச்சமாகும் உணவு வகைகளை சேகரித்து, உணவு தேவைப்படுபவர்களுக்கு வழங்கும் பணியை சேலத்தை தலைமை இடமாக, 'நோ புட் வேஸ்ட்' என்ற தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், பள்ளி, கல்லூரி விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை, உணவு பதார்த்தங்களை, முழுமையாக செலவு செய்ய முடியாமல் மிச்சமாகும் உணவு வகைகளை சேகரித்து, உணவு தேவைப்படுபவர்களுக்கு வழங்கும் பணியை சேலத்தை தலைமை இடமாக, 'நோ புட் வேஸ்ட்' என்ற தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் நாமக்கல்லிலும் அந்த சேவை துவக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இருந்து, சேவை வாகனத்தை, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் துவக்கி வைத்தார். இந்த வாகனத்தில் சேகரிக்கும் உணவுகளின் தரத்தை பரிசோதித்து, சாலையோரம் இருக்கக்கூடிய ஆதரவற்ற மக்கள், குடிசைப் பகுதியில் இருக்கக்கூடிய ஏழை, எளியவர்கள், அரசு மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளி இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று வினியோகிக்கப்படும். விபரங்களுக்கு, 9087790877 என்ற எண்ணுக்கும் அல்லது www.nofoodwaste.org என்ற இணையதள முகவரியில் தகவலை தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X