வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : அக் 01, 2021
Share
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்விற்கு அவசியமான நில அளவை

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்விற்கு அவசியமான நில அளவை பயிற்சி மற்றும் பவானிசாகர் அடிப்படை பயிற்சிகளை உடனடியாக மாவட்ட அளவில் நடத்த வேண்டும். இல்லையென்றால் பயிற்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியினை அரசாணையின் படி வரன்முறைப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பணி முதுநிலை பட்டியல் தொடர்பாக அரசு மட்டத்தில் திருத்திய தெளிவுரைகள் வழங்கி நிரந்தர தீர்வு காண வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர், துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X