சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்குடும்பத்துடன் உணவுஇன்றைய சூழலில் குழந்தைகளை சாப்பிட வைப்பது பெரிய வேலையாக உள்ளது. அதுவும் காய்கறி உட்பட சத்தான உணவுகளை குழந்தைகள் சாப்பிட வைப்பதற் காக, 'டிவி', அலைபேசி பார்க்க வைத்தல் அல்லது ஏதாவது பொருள் வாங்கி தருகிறேன் என கூற வேண்டியுள்ளது. இந்நிலையில் குடும்பமாக அமர்ந்து சாப்பிடுதல் அல்லது சமையல் வேலைகளில் குழந்தைகளையும் பங்கேற்க வைப்பதன்

அறிவியல் ஆயிரம்

குடும்பத்துடன் உணவு


இன்றைய சூழலில் குழந்தைகளை சாப்பிட வைப்பது பெரிய வேலையாக உள்ளது. அதுவும் காய்கறி உட்பட சத்தான உணவுகளை குழந்தைகள் சாப்பிட வைப்பதற் காக, 'டிவி', அலைபேசி பார்க்க வைத்தல் அல்லது ஏதாவது பொருள் வாங்கி தருகிறேன் என கூற வேண்டியுள்ளது. இந்நிலையில் குடும்பமாக அமர்ந்து சாப்பிடுதல் அல்லது சமையல் வேலைகளில் குழந்தைகளையும் பங்கேற்க வைப்பதன் மூலம் குழந்தைகள் தானாகவே சாப்பிட தொடங்குவர். வம்படியாக திணிக்க தேவையில்லை என தெற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ் லாந்து பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்

வன்முறை இல்லா உலகம்


இந்திய சுதந்திர போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் காந்தி. 1869 அக்.2ல் குஜராத்தில் பிறந்தார். இவரது பிறந்த தினமான அக்.2 ஐ.நா., சார்பில் உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. துவக்கத்தில் சில காலம் மும்பையில் வக்கீலாக பணியாற்றி பின் தென் ஆப்ரிக்கா சென்று நிறவெறி, இனபாகுபாடுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். 1915ல் இந்தியா திரும்பிய இவர், ஆங்கிலேயர்களை எதிர்த்து சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு என பல போராட்டங்களை அகிம்சை வழியில் நடத்தி வெற்றி கண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X