பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்தில் 2021, 2022ம் ஆண்டிற்கு 9,301 மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயம் அமைச்சர் அமைச்சர் தகவல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
காங்கேயம்:திருப்பூர் மாவட்டத்தில் 2021, 2022ம் ஆண்டிற்கு 9,301 மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். காங்கேயத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினர். இதில் கலந்து கொண்ட செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

காங்கேயம்:திருப்பூர் மாவட்டத்தில் 2021, 2022ம் ஆண்டிற்கு 9,301 மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

காங்கேயத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினர். இதில் கலந்து கொண்ட செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: மக்களின் தேவைகேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் நீர் மூலமாகவும், அனல் மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படடது. தற்போதைய காலக்கட்டத்தில் மரபு சாரா எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் விவசாயிகளின் மின் இணைப்பிற்காக வெகு நாட்களாக காத்திருந்த சூழ்நிலை மாறி தற்போது அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டு ஒன்றொன்றுக்கு 1 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திற்கு 2021, 2022ம் ஆண்டிற்கு 9,301 மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மின்னகம் செயலி மூலம் மின் தொடர்பான புகார்களுக்கு 94987-94987 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படும். கடந்த 20.06.2021 முதல் நாளது தேதி வரை திருப்பூர் மாவட்டம் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் 1,039 புகார்கள் வரப்பெற்று 1,021 புகார் களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் 2,732 புகார் கள் வரப்பெற்று 2,705 புகார்களுக்கு நடவடிக்கையும், உடுமலைப்பேட்டை மின் பகிர்மான வட்டத்தில் 1,615 புகார்கள் வரப்பெற்று 1,606 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், தேவையான இடங்களில் துனை மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. நத்தக்காடையூர், பழைய கோட்டை, வெள்ளகோவில் மற்றும் முத்தூர் பகுதிகளில் விவசாயிகள் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வேண்டுமென்ற கோரிக்கை வைத்துள்ளனர். அதனை உடனடியாக பரிசீலினை செய்து இன்று முதல் முத்தூர் பகுதிகளில் ஊடயம், சின்னப்புத்தூர், டி.கே.பாளையம், பழைய கோட்டை பகுதிகளில் நத்தக்காடையூர் மருதுறை வெள்கோவில் பகுதிகளில் குருக்கத்தி ஆகிய பகுதிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X