சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,612-ல் இருந்து 1,597 ஆக சற்று குறைந்துள்ளது. 25 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,623 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,53,288 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,597 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,65,386 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,62,38,440 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 898 பேர் ஆண்கள், 699 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,55,729 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,09,619 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,623 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,12,684 ஆக உயர்ந்துள்ளது.
25 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 18 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,603 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 189 ஆக இருந்த நிலையில் இன்று (அக்.1ம் தேதி) 190 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்

