தடுப்பூசி போட ஆதார் கேட்பதற்கு எதிராக மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
புது டில்லி: கோவிட் தடுப்பூசி மையங்களிலும், தடுப்பூசிக்கு பதிவதற்கான கோவின் போர்ட்டலிலும் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். அம்மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புனேவைச் சேர்ந்த வழக்கறிஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான சித்தார்த்

புது டில்லி: கோவிட் தடுப்பூசி மையங்களிலும், தடுப்பூசிக்கு பதிவதற்கான கோவின் போர்ட்டலிலும் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். அம்மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.latest tamil news


புனேவைச் சேர்ந்த வழக்கறிஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான சித்தார்த் சங்கர் என்பவர் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், “மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் ஆதார் உள்ளிட்ட பரிந்துரைக்கப்பட்ட 7 புகைப்பட அடையாள அட்டைகளில் எதையேனும் ஒன்றைக் காட்டி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

அவை எதுவும் வைத்திராத நபர்களுக்கு கூட தடுப்பூசி போட வேண்டும் என்கிறது. ஆனால் அவை பேப்பரில் மட்டுமே இருக்கின்றன. நடைமுறையில் ஆதார் கட்டாயமாக கேட்கப்படுகிறது. எனவே கோவின் போர்ட்டலில் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். அதனை அனைவரும் அணுகும் படி புதுப்பிக்க வேண்டும்.” என கேட்டிருந்தார்.


latest tamil news
இம்மனுவை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இவ்விவகாரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஆதாரை நிர்வகிக்கும் யு.ஐ.டி.ஏ.ஐ., ஆகியவை பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Minimole P C - chennai,இந்தியா
02-அக்-202108:53:37 IST Report Abuse
Minimole P C The court doesn't know the administration. Both the petitioner and the court are fools.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
02-அக்-202108:12:32 IST Report Abuse
jayvee இப்படி நீதிமன்றங்கள் இருக்கும் வரை நாட்டில் ஒரு நல்ல சட்டமும் நடைமுறைப்படுத்த முடியாது. இந்த ஆதார் வழக்கை சரியாக அதன் தேவை புரியாமல் இன்று வரை எல்லநீதிமன்றமும் இதை ஒரு தங்களின் புபிளிசிட்டிக்காகவே கையாளுகின்றன
Rate this:
Cancel
Shake-sphere - India,இந்தியா
02-அக்-202108:07:14 IST Report Abuse
 Shake-sphere பாதுகாக்கப்பட்ட விலங்குகளுக்கு கூட ஒரு அடையாள எண் கொடுக்கப்பட்டுள்ளது மனு தாக்கல் செய்துள்ளவன் அதுகூட இல்லாத அற்ப பிறவியா எப்படி இவனை அடையாளம் காண்பது ஊடுருவியவனாக இருப்பானோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X