சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : அக் 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை: தமிழக எம்.பி.,க்கள், ஐந்து ஆண்டுகளாக ஜி.எஸ்.டி., என்றால் என்ன என்றே தெரியாமல், பார்லிமென்டில் பேசி வருகின்றனர்; எதிர்த்தும் வருகின்றனர். ஜி.எஸ்.டி.,யில் உள்ள இரண்டு முக்கிய கோட்பாடுகள் கூட, அவர்களுக்கு தெரியவில்லை.'டவுட்' தனபாலு: தமிழக எம்.பி.,க்கள் மட்டுமல்ல, தமிழக கட்சி தலைவர்களில் திருமாவளவன் உட்பட பெரும்பாலானோருக்கு ஜி.எஸ்.டி., பற்றி சரிவர

'டவுட்' தனபாலு

பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை: தமிழக எம்.பி.,க்கள், ஐந்து ஆண்டுகளாக ஜி.எஸ்.டி., என்றால் என்ன என்றே தெரியாமல், பார்லிமென்டில் பேசி வருகின்றனர்; எதிர்த்தும் வருகின்றனர். ஜி.எஸ்.டி.,யில் உள்ள இரண்டு முக்கிய கோட்பாடுகள் கூட, அவர்களுக்கு தெரியவில்லை.

'டவுட்' தனபாலு: தமிழக எம்.பி.,க்கள் மட்டுமல்ல, தமிழக கட்சி தலைவர்களில் திருமாவளவன் உட்பட பெரும்பாலானோருக்கு ஜி.எஸ்.டி., பற்றி சரிவர தெரியாது. பொத்தாம் பொதுவாக சில எதிர்ப்பு கருத்துகளை பேசி வைக்கின்றனர். அதையே அவர்களின் கட்சியினரும், உடைந்த 'ரெக்கார்டு' போல பேசி வருகின்றனர். சிலருக்கு நல்ல விபரம் தெரியும். எனினும், அரசியலுக்காக அமைதி காக்கின்றனர். அவர்களை திருத்த முற்படுவது வீண் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
: கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, பத்திரங்களாக மாற்றி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மற்ற கோவில்கள் பராமரிப்புக்கு செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது. கோவில்களுக்கு அறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல, தி.மு.க., அரசு செயல்படுவது நம்பிக்கை துரோகம்.

'டவுட்' தனபாலு: 'ஹிந்து என்றால் திருடன்' என சொல்லாமல் இருந்திருந்தால்... பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு, ஹிந்து பண்டிகைகளை புறக்கணிக்காமல் இருந்திருந்தால்... ஹிந்துக்களுக்கும், கோவில்களுக்கும் எதிராக பேசாமல் செயல்படாமல், இருந்திருந்தால், தி.மு.க., அரசின் இந்த முடிவை ஹிந்துக்கள் நம்பி இருப்பரோ என்ற, 'டவுட்' வருகிறது!


தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்:
அ.தி.மு.க.,வினர் பிரதமர் மோடிக்கு கூழை கும்பிடு போட்டனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அப்படியல்ல. 'மத்திய அரசை எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல. உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற ரீதியில் செயல்படுகிறார்.

டவுட்' தனபாலு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போல இருந்தால், கதைக்கு ஆகாது என்பதை தாமதமாக உணர்ந்து, மத்திய அரசுடனான உறவில் முதல்வர் ஸ்டாலின் அடக்கி வாசிக்கிறார். மேலும், எதிர்க்கட்சியாக இருந்த போது வேறு, முதல்வரான பிறகு வேறு என்ற ரீதியில் அவரின் செயல்பாடு மாறியுள்ளது. அவரின் நெளிவு, சுளிவுகளை இவர் அறிந்திருக்க மாட்டாரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-அக்-202115:26:55 IST Report Abuse
D.Ambujavalli கோயில்களின் நகைகள் பல அக்கால அரசர்கள் ஆணடவனை அலங்கரிக்க செய்து போட்டது பல தனவந்தர்கள் நன்கொடையாக சமர்ப்பித்தது கோயில் நிலங்களை மீட்டு, அதன் வரும்படியில் 'ஏழை கோயில்களுக்கு 'உதவினாள் போதும் இவர்கள் கபளீகரம் செய்த அசையா சொத்துக்கள் போக இப்போது நகைநட்டுகளிலும் கைவைக்க துடிக்கிறார்கள்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
02-அக்-202109:58:16 IST Report Abuse
duruvasar நிமிர்ந்து நின்று சல்யூட் அடித்து தான் கண்ணப்பன் பதவி வாங்கியிருப்பாரோங்கர டவுட் பாலுவுக்கு வரவில்லையோ
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
02-அக்-202109:07:00 IST Report Abuse
Arul Narayanan ஸ்டாலினாவது மாறுவதாவதாவது இன்னமும் ஒன்றிய அரசு என்று கிண்டலடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X