சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'மில்லியன் டாலர்' கேள்வி!

Added : அக் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'மில்லியன் டாலர்' கேள்வி!அ.முத்துராமன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை வாயிலாக 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 929 கத்திகள் மற்றும் ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.இந்த அதிரடி நடவடிக்கையை காவல்துறை எடுத்திருக்காவிட்டால், அந்த 2,512 ரவுடிகளும்


'மில்லியன் டாலர்' கேள்வி!அ.முத்துராமன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை வாயிலாக 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 929 கத்திகள் மற்றும் ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.இந்த அதிரடி நடவடிக்கையை காவல்துறை எடுத்திருக்காவிட்டால், அந்த 2,512 ரவுடிகளும் அன்றாடம் நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் குற்றச்செயல்களை அரங்கேற்றி இருப்பர். அதில் எத்தனை கொலை சம்பவங்களோ...தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ரவுடிகள் அட்டகாசம் அதிகரிக்கும் என்ற பொதுவானதொரு எண்ணம் அனைவருக்கும் உண்டு.அந்த 2,512 ரவுடிகளும் கைது செய்யப்பட்ட நாள் வரை, குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் தானே... அவர்களை இது நாள் வரை, ஏன் போலீசார் கைது செய்யவில்லை?சுதந்திரமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளை 36 மணி அவகாசத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அப்படி என்றால், போலீசாருக்கு இந்த கட்டளையை பிறப்பித்தது யார்?
இத்தனை நாட்களாக ரவுடிகளை கைது செய்ய கூடாது என்று, காவல் துறையின் கைகளுக்கு விலங்கு மாட்டி வைத்திருந்தது யார்?நாய் பிடிக்கும் மாநகராட்சி வண்டியை கண்டதும், தெருவில் செல்வோரை எல்லாம் துரத்தியும், மிரட்டியும் வந்த நாய்கள் எல்லாம், வாலை சுருட்டியபடி பதுங்கி தப்பிக்க முயற்சிக்கும்.மாநகராட்சி ஊழியர்கள், அந்த நாய்கள் மீது சுருக்குக் கயிறை வீசி பிடித்து, வண்டியில் துாக்கி போடுவர்.அது போல, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்த காலத்தில், காக்கி அரை கால் சட்டை அணிந்து, சைக்கிளில் ரோந்து வரும் போலீஸ்காரர்களை கண்டவுடன், ரவுடிகள் எல்லாம் பதுங்கி விடுவர்.
ஆனால் தற்போதைய ரவுடிகள், போலீசார் சிலருடன் சேர்ந்து, 'டாஸ்மாக் பார்'களில் சரிசமமாக அமர்ந்து மது அருந்தி, நட்பு பாராட்டுகின்றனரே... அப்புறம் எப்படி குற்றங்கள் குறையும்?ஆக 36 மணி நேரத்தில், 2,512 ரவுடிகளை கைது செய்திருக்கும் சம்பவத்தில் இருந்து ஒரு விஷயம் புலனாகிறது...முன்னொரு காலத்தில், 'ஸ்காட்லாந்து யார்ட்' போலீசுக்கு இணையாக பெயர் பெற்றிருந்த தமிழக காவல் துறை, முயன்றால் மாநிலத்தில் குற்றங்களே
நிகழாதவாறு தடுக்க முடியும்.ஆனால் போலீசார் அப்படி செய்வதில்லையே ஏன்? அவர்களை தடுப்பது ஆளுங்கட்சியினரா, அதிகாரிகளா, செல்வாக்கா என்பது தான், 'மில்லியன் டாலர்' கேள்வி!


தி.மு.க., போராட்டம் நடத்தியது ஏன்?சி.சிவகுமார், கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், லக்னோவில் நடந்த 45வது ஜி.எஸ்.டி., கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் பங்கேற்கவில்லை.ஜி.எஸ்.டி., கூட்டத்தை விட முக்கியமான வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால், தியாகராஜன் லக்னோ செல்லவில்லை போலும்!பெட்ரோல் பொருட்களை ஜி.எஸ்.,டி.,யின் கீழ் கொண்டு வருவது தொடர்பான முக்கியமான விவாதம் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்ததால், இவ்விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது புரிந்து விட்டது.
விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு முக்கியமான காரணம் என்பது அமைச்சருக்கு தெரியாதா?தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என போராட்டம் நடத்தியது எல்லாம், மக்களை ஏமாற்றி ஓட்டுகள் பெறுவதற்கு தானா?மத்திய அரசுக்கு எதிராக சட்டசபையில் ஓங்கி ஒலித்த குரல், ஜி.எஸ்.டி., கூட்டத்தில் ஒலிக்காமல் அமைதியானது ஏன்?பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஏழை, எளிய மக்களைத் தான் பாதிக்கிறது; அமைச்சர் போன்ற பெருந்தனவந்தர்களை அல்லவே.'விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும்' என குரல் கொடுக்கும் கம்யூ., மற்றும் 'சமூக நீதி காவலர்' தலைவர்களை எங்கே காணவில்லை?தி.மு.க.,விடம் கெஞ்சி கூத்தாடி, சில எம்.எல்.ஏ., பதவிக்கான 'சீட்' வாங்கியதால், வாய்மூடி இருக்கின்றனரா?இந்த அரசியல்வாதிகளை பார்க்கும்போது, 'மக்கள் நலம் மக்கள் நலம் என்றே கூறுவார்; தன் மக்கள் நலம் ஒன்றை மட்டும் மனதில் கொள்வார்...' என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.


பெரும் உதவியாகும் இழப்பீடு!மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனாவால் இறந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, மத்திய அரசு முன்வந்திருக்கிறது. வேறு எந்த நாடுகளும் செய்யாத மனிதாபிமானமிக்க ஒரு செயலை, இந்தியா செய்திருக்கிறது; அதற்காக நாம் பெருமைப்படலாம்.இறந்தவரின் உயிரை மீட்டுத் தர முடியாது; ஆனால், இப்போது வழங்க இருக்கும் இழப்பீடான 50 ஆயிரம் ரூபாய், இறந்தவரின் குடும்பத்திற்கு ஒரு ஆறுதலாகவும், பெரும்
உதவியாவும் இருக்கும்.'தொற்றால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு கிடையாது' என, மத்திய அரசு முதலில் அறிவித்தது.ஆனால் மறுபரிசீலனை செய்து, 'தொற்றால் பாதிக்கப்பட்டு, 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்திற்கும் இழப்பீடு உண்டு' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த செயலை, உச்ச நீதிமன்றம் பாராட்டியுள்ளது.இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நாட்டில், இறந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுப்பது சுலபமல்ல; அதை அமல்படுத்துவது பெரிய சாதனை.வல்லரசு நாடுகளும், அதிக பணம் படைத்த நாடுகளும், ஏழை நாடுகளும் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுப்பது குறித்து யோசிக்கவே இல்லை.பிரதமர் மோடி தலைமையிலான நம் மத்திய அரசு, கொரோனாவால் இறந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முன்வந்திருக்கிறது. இதுவரை நம் நாட்டில் 4.46 லட்சம் பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2,200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்திற்கு வருவாய் ஈட்டித்தரும் நபர் இறந்திருந்தால், இந்த இழப்பீடு அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இச்செயலால் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயரும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-அக்-202115:40:45 IST Report Abuse
D.Ambujavalli ஒருவேளை, ஜி எஸ் டி கூட்டத்தில் கலந்துகொண்டு வழக்கம்போல் தமது புலமையைக் காட்டி மத்திய அரசை சங்கடப்படுத்தி விடுவாரோ என்று முதல்வரே கூட 'வெகு காரியமாக' ஒதுக்கி வைத்திருப்பாரோ? அமைச்சர் போகாதது பற்றியும், சமுதாய வளைக்காப்பான தலைபோகும் கடமையாற்றியதையும் கண்டித்தோ, விமர்சித்தோ கூட முதல்வர் சிறு ஆட்சேபனை, அறிக்கை i கூட விடவில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X