சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தேர்தல் ஆணையம் அலட்சியம்!

Added : அக் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேர்தல் ஆணையம் அலட்சியம்!டீயை உறிஞ்சியபடியே, ''கட்டுமான பணிகளை பார்த்து அதிர்ச்சி ஆகிட்டாருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''சேலம் மாவட்டம், மேட்டூர்ல, அனல்மின் நிலைய இரண்டாவது யூனிட் ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்டுறாங்க... இந்தப் பணிகளை, சமீபத்துல, மேட்டூர் பா.ம.க., - எம்.எல்.ஏ.,

 டீ கடை பெஞ்ச்


தேர்தல் ஆணையம் அலட்சியம்!



டீயை உறிஞ்சியபடியே, ''கட்டுமான பணிகளை பார்த்து அதிர்ச்சி ஆகிட்டாருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சேலம் மாவட்டம், மேட்டூர்ல, அனல்மின் நிலைய இரண்டாவது யூனிட் ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்டுறாங்க... இந்தப் பணிகளை, சமீபத்துல, மேட்டூர் பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம் ஆய்வு செய்தாருங்க...

''அப்ப, கட்டுமான பணிக்கு, 'எம் - சாண்டுக்கு பதிலா, கிரஷர் பவுடரை பயன்படுத்துறீங்களாமே'ன்னு, மணலை கையில அள்ளி பார்த்து, கேள்வி கேட்டாருங்க... பதறிய மின்வாரிய சிவில் பிரிவு அதிகாரிகள், 'இனி, இந்த மாதிரி தவறுகள் நடக்காம பார்த்துக்கிறோம்'னு சமாதானம் சொன்னாங்க...

''இதுல, எம்.எல்.ஏ., திருப்தி ஆகிட்டாருங்க... ஆனாலும், கட்டுமான பணிகள் தரமா நடக்கிறதை, அதிகாரிகள் கண்காணிச்சா நல்லது... இல்லேன்னா, சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியத்துல, சுரண்டுன சுவர் பெயர்ந்து விழுந்துச்சே... அந்தக் கதையா ஆகிடுமுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''உள்ளாட்சி தேர்தலா இருந்தாலும், மோடியின் சாதனைகளை சொல்லுங்கன்னு உத்தரவு போட்டிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''பா.ஜ., தகவலா... மேல சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''தமிழகத்துல ஒன்பது மாவட்டங்கள்ல நடக்கிற ஊரக உள்ளாட்சி தேர்தல்ல, பா.ஜ.,வினர் சில இடங்கள்ல, அ.தி.மு.க., கூட்டணியிலயும், சில இடங்கள்ல தனியாகவும் போட்டியிடுதாங்கல்லா...

''பிரதமர் மோடி அரசு, விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, மானிய விலையில உரம், ரேஷன்ல இலவச அரிசி, கொண்டை கடலை எல்லாம் தந்திருக்கு... ஏழைகளுக்கு இலவச காஸ் சிலிண்டர் தருது... கொரோனா தடுப்பூசியை இலவசமா தருது...

''இந்த திட்டங்களால, தமிழகத்துல பல கோடி பேர் பலன் அடைஞ்சிருக்காவ... அதனால, இந்த சாதனைகளை எல்லாம் 'பிட் நோட்டீஸ்' மாதிரி அச்சடிச்சு, ஓட்டு சேகரிக்க போறப்ப, மக்களிடம் தரணும்னு, பா.ஜ., மாநில தலைமை உத்தரவு போட்டிருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.

''தேர்தல் ஆணையம் அலட்சியமா இருக்கு ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.

''என்ன சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் தொடர்பா ஒர்த்தர், மாநில தேர்தல் ஆணைய புகார் மையத்தை 'கான்டாக்ட்' பண்ணி புகார் தெரிவிச்சார்... அவாளோ, ஒன்றிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளச் சொன்னா... 'ஏன்... நீங்க தானே பார்க்கணும்...' என கேட்டிருக்கார்... சரியான பதில் இல்லே...

''இது சம்பந்தமான 'ஆடியோ' சமூக வலைதளத்துல கொடி கட்டிப் பறக்கறது ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''தேர்தல் சரியா நடந்தா சரி தான் வே...'' என்றபடி அண்ணாச்சி எழுந்து கொள்ள, மற்றவர்களும் கிளம்பத் தயாராகினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-அக்-202115:32:12 IST Report Abuse
D.Ambujavalli தேர்தலா ? அதெல்லாம் தீர்ப்பு எழுதியபின் கேஸைத் தொடங்குவது போலத்தான் பல இடங்களில் இன்றே தேர்தல் முடிந்ததுபோல நடந்துகொள்கிறார்கள் இந்த கேலிக்கூத்துக்கு மக்களின் வரிப்பணம் செலவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X