பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : அக் 01, 2021
Share
Advertisement
அக்., 2, 1869 குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869 அக்., 2ம் தேதி பிறந்தவர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. லண்டனில், 'பாரிஸ்டர்' பட்டம் பெற்று மும்பையில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். 1893ல் தென்னாப்பிரிக்காவுக்கு பணி நிமித்தமாக சென்றார். அங்கு நிலவிய ஆங்கிலேயரின் நிற வெறிக்கு எதிராக, அமைதி வழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, வெற்றி பெற்றார்.தாய்நாடு திரும்பியவர்,

இதே நாளில் அன்று

அக்., 2, 1869

குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869 அக்., 2ம் தேதி பிறந்தவர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. லண்டனில், 'பாரிஸ்டர்' பட்டம் பெற்று மும்பையில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். 1893ல் தென்னாப்பிரிக்காவுக்கு பணி நிமித்தமாக சென்றார். அங்கு நிலவிய ஆங்கிலேயரின் நிற வெறிக்கு எதிராக, அமைதி வழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, வெற்றி பெற்றார்.தாய்நாடு திரும்பியவர், குஜராத்தின் ஆமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில், 'சத்தியாகிரக ஆசிரமம்' துவக்கினார். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு தலைமை ஏற்றார். 'ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு'உள்ளிட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.பலமுறை சிறை வாசம் அனுபவித்தார். எண்ணற்ற முறை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கிராம முன்னேற்றம், தாழ்த்தப்பட்டோர் நலன், மத ஒற்றுமைக்காக பாடுபட்டார். 1948 ஜன., 30ம் தேதி, தன் 78வது வயதில், நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.'தேசத் தந்தை' மஹாத்மா காந்தி பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X