அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை:அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காலை 10:00 மணிக்கு, கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இன்றைய கிராம சபை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அவர் இன்று காலை 8:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரை செல்கிறார். அங்கு, காலை 10:30 முதல், 11:30 மணி வரை, பாப்பாபட்டியில் நடக்கும்

சென்னை:அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காலை 10:00 மணிக்கு, கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்றைய கிராம சபை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அவர் இன்று காலை 8:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரை செல்கிறார். அங்கு, காலை 10:30 முதல், 11:30 மணி வரை, பாப்பாபட்டியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

கிராம சபை கூட்டம் முடிந்த பின், கே.நாட்டார்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தை பார்வையிட உள்ளார். பகல் 12:45 மணிக்கு, மதுரை மேலமாசி வீதியில், காந்தி மேலாடை துறந்த இடத்திற்கு செல்கிறார். பகல் 1:10 மணிக்கு, காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். 2:30க்கு கருணாநிதி நுாலகம் அமைக்கும் இடத்தை பார்வையிடுகிறார். பின் சென்னை திரும்புகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X