மத்திய அரசு திட்டம் முதல்வர் வரவேற்பு

Updated : அக் 03, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை:'துாய்மை இந்தியா' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா பெருந்தொற்றை வென்று, அனைத்து மாநிலங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. தமிழகமும் தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. துாய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ருத்
மத்திய அரசு திட்டம் ,முதல்வர் வரவேற்பு

சென்னை:'துாய்மை இந்தியா' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா பெருந்தொற்றை வென்று, அனைத்து மாநிலங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. தமிழகமும் தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. துாய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ருத் திட்டங்களின் இரண்டாம் கட்ட பணிகளை வரவேற்கிறேன்.

நாட்டில் நகரமயமாக்கல் வேகமாக நடந்து வரும் நிலையில், இதுபோன்ற திட்டங்கள் தேவையானவை. இந்தியாவில் அதிக நகரமயமாகிய மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. மேலும் நகர்ப்புற மேம்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழகம், கழிப்பறை வசதி மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை பெருமளவு மேம்படுத்தி உள்ளது.

கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் புதுமையான திட்டங்களையும், தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வரும் 2031ம் ஆண்டை எண்ணத்தில் வைத்து, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.மக்கள் வாழ, நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்த, மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
02-அக்-202112:32:03 IST Report Abuse
Duruvesan வருங்கால ஜனாதிபதி, ஸ்டாலின் வாழ்க
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
02-அக்-202110:41:55 IST Report Abuse
elakkumanan பதவிக்காக திமுக எவ்ளோ பெரிய பல்டி வேண்டுமானாலும் அடிக்கும்...வரலாறு அப்படித்தான் இருக்கு...இதுவே ட்ரைலர் தான்...மெயின் பல்டி இனிமேல்தான் இருக்கு........... உப்பிஸ் இருதய சிகிச்சை மருத்துவரின் அலைபேசி நம்பரை சேவ் செய்து வைத்துக்கொள்வது நல்லது....நமக்கு நாமே திட்டம் தான்.................இதுக்கு பெயர் முதிர்ச்சி இல்லை... இதுக்கு பெயர்.........வேறு வழியில்லை...............
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
02-அக்-202110:24:52 IST Report Abuse
அசோக்ராஜ் //"மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்"// கவ்னர் நெசமாலுமே அப்பா டக்கர் தானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X