சில வரி செய்திகள்... இந்தியா

Added : அக் 01, 2021
Share
Advertisement
சாலை விபத்து: 7 பேர் பலிபோபால்: மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டம் கோஹட் அருகே நேற்று காலை உத்தரப்பிரதேசம் நோக்கிச் சென்ற பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பலியாயினர். காயமடைந்த 13 பேர் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சந்தீப் சிங் பொறுப்பேற்புபுதுடில்லி: இந்திய விமானப்படை துணைத்தலைவராக, ஏர் மார்ஷல்

சாலை விபத்து: 7 பேர் பலி

போபால்: மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டம் கோஹட் அருகே நேற்று காலை உத்தரப்பிரதேசம் நோக்கிச் சென்ற பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பலியாயினர். காயமடைந்த 13 பேர் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சந்தீப் சிங் பொறுப்பேற்பு

புதுடில்லி: இந்திய விமானப்படை துணைத்தலைவராக, ஏர் மார்ஷல் சந்தீப் சிங் பொறுப்பேற்றார். தேசிய பாதுகாப்பு அகாடமி முன்னாள் மாணவரான சந்தீப் சிங், 1983ல் விமானப்படையில் சேர்ந்தார். பல்வேறு வகை போர் விமானங்களை செலுத்தியுள்ள இவருக்கு, அவற்றின் தொழில் நுட்பத்திலும் சிறந்த அனுபவம் உண்டு.

பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட ஷமிம் சோபி என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப் பட்டன.ஷோபியான் மாவட்டம் ரக்மா கிராமத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவரை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.

கல்லுாரி மாணவி கொலை

கோட்டயம்: கேரளாவின் கோட்டயத்தில் பால் செயின்ட் தாமஸ் கல்லுாரி மாணவர் அபிஷேக், 21. கூத்தாட்டுக்குளத்தைச் சேர்ந்த இவர், தன்னுடன் படிக்கும் வைக்கம் பகுதியைச் சேர்ந்த நித்தினாவை, நேற்று கத்தியால் குத்திக்கொலை செய்தார். இருவரும் நெருக்கமாக பழகியவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

டில்லியில் கோவில் திறப்பு
புதுடில்லி: டில்லியில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுடன் வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. இருப்பினும் திருவிழா, ஊர்வலம் உள்ளிட்ட மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X