விவசாய சங்கத்தினருக்கு சுப்ரீம் கோர்டகண்டனம்!  சாலைகளை முடக்குவதற்கு கடும் எதிர்ப்பு

Updated : அக் 03, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (16+ 27)
Share
Advertisement
புதுடில்லி : 'விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், நெடுஞ்சாலைகளை முடக்கி ஒட்டு மொத்த டில்லி நகரின் குரல்வளையை நசுக்கி விட்டீர்கள்; இப்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்கள்' என, விவசாய அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி, விவசாய
விவசாய சங்கத்தினர், சுப்ரீம் கோர்ட் ,சாலைகள் முடக்கம் எதிர்ப்பு

புதுடில்லி : 'விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், நெடுஞ்சாலைகளை முடக்கி ஒட்டு மொத்த டில்லி நகரின் குரல்வளையை நசுக்கி விட்டீர்கள்; இப்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்கள்' என, விவசாய அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி, விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டு செப்., முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.டில்லி எல்லைகளில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கடந்த 10 மாதத்துக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.டில்லி எல்லைகளில் நெடுஞ்சாலைகளை முடக்கி, விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டு போராட்டம் நடத்தப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டம் நடத்த அனுமதி கோரி, 'கிசான் பஞ்சாயத்து' என்ற விவசாய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.


அவமதிக்கும் செயல்



அதில், 'ஜந்தர் மந்தர் பகுதியில் 200 விவசாயிகள் அமைதியாக அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு இடம் ஒதுக்கி தர சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் கான்வில்கர், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கூறியதாவது:விவசாய சட்டங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். அதன்பின் எதற்காக தொடர் போராட்டம் நடத்துகிறீர்கள்?எல்லையில் போராட்டம் என்ற பெயரில் நெடுஞ்சாலைகளை முடக்கி ஓட்டு மொத்த டில்லி நகரின் குரல்வளையை நசுக்கி விட்டீர்கள். இப்போது டில்லி நகருக்குள் போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்கள். சமநிலையான அணுகுமுறை அனைத்திலும் தேவை.

போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதே நேரத்தில் சுதந்திரமாக, அச்சமின்றி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல பொது மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் போராட்டத்தில் மக்களின் உடமைகள் சேதப்படுத்தப்படுகின்றன. டில்லி எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்களிடம், போராட்டம் நடத்த விவசாய அமைப்பினர் அனுமதி பெற்றனரா? விவசாயிகள் போராட்டத்தால் எல்லைப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா என, கேட்க வேண்டும். ஒரு விஷயத்தில் நீதிமன்றத்தை அணுகிவிட்டால், நீதிமன்றத்தின் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை வைத்து, அதை விட்டுவிட வேண்டும்.

நீதிமன்றம் முறையாக முடிவு எடுக்கும். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது தான் உங்கள் கோரிக்கை. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பின் போராட்டம் நடத்துவோம் என நீங்கள் கூற முடியாது.அப்படியென்றால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு எதற்கு?நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து விட்டு, போராட்டமும் நடத்துவது நீதித்துறையைஅவமதிக்கும் செயல்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.




கோரிக்கை வையுங்கள்



மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறுக்கிட்டு, 'நீதிமன்றத்தை விவசாய அமைப்புகள் அவமதிக்கவில்லை' என்றார். அதற்கு நீதிபதிகள், 'நீதித்துறையை அணுகிவிட்டால் நம்பிக்கை வைக்க வேண்டும். போராட்டம் நடத்துவதற்கு பதிலாக அந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரிக்கை வையுங்கள்' என்றனர்.மனுதாரர்களின் வழக்கறிஞர் கூறுகையில், 'ஜந்தர் மந்தரில் இடம் அளித்தால் விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்துவர்' என்றார். அதற்கு நீதிபதிகள், 'அமைதியான போராட்டம் என்றால் ரயில்களை மறிப்பது, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை தடை செய்வது என அர்த்தமா; அமைதியான போராட்டத்தில் மக்களுக்கு இடையூறு வராது என்று கூறுகிறீர்களா' என, கேட்டனர்.அதற்கு மனுதாரர் வழக்கறிஞர், 'நெடுஞ்சாலைகளை விவசாயிகள் மறிக்கவில்லை. போலீசார் தான் மறித்தனர்' என்றார்.

குறித்துக் கொள்கிறோம்அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:
விவசாயிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்துக்கு வந்து, போராட்டம் நடத்தினோம், நெடுஞ்சாலைகளைத் தடை செய்தோம், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் நெஞ்சாலைகளை மறிக்கவில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். அந்தப் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்கவில்லை என்றால், அதை பிரமாணப் பத்திரத்தில் தெரியப்படுத்துங்கள். அதைக் குறித்துக் கொள்கிறோம்.வழக்கு விசாரணையை 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். இந்த வழக்கின் மனுவின் நகலை மத்திய அரசுக்கும், அட்டர்னி ஜெனரலுக்கும் அனுப்ப உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்.

போராட்டம் கலைப்பு

ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜஜ்ஜர் மாவட்டத்துக்கு நேற்று வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் விவசாய அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமானோர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை முற்றகையிடும் நோக்கில் ஊர்வலமாக சென்றனர். போலீசார் ஏற்படுத்தியிருந்த தடைகளை உடைத்து, அவர்கள் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விவசாய அமைப்பு
களைச் சேர்ந்தவர்களை விரட்டியடித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (16+ 27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
02-அக்-202119:49:14 IST Report Abuse
Ram இந்த தரகர்களை விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-அக்-202119:13:05 IST Report Abuse
sankaseshan பிறர் படும் துன்பத்தில் இன்பம் காணும் போலி விவசாயிகள் அடித்து நொறுக்குங்கள் , வழிக்கு வருவனுங்க
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
02-அக்-202117:30:42 IST Report Abuse
DVRR சும்மா விவசாய சங்கம் என்று மறுபடி மறுபடி டப்பா அடிக்க வேண்டாம் சரியான வார்த்தை இடை தரகர்கள் கூட்டம் காலிஸ்தான் பணத்தினால் இப்படி ஆட்டம் போடுகின்றது, சட்டு புட்டுன்னு தீர்வு கொடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X