ரஷ்யா தப்பினாரா மாஜி கமிஷனர்? லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு!| Dinamalar

ரஷ்யா தப்பினாரா மாஜி கமிஷனர்? 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிப்பு!

Updated : அக் 03, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (8+ 9)
Share
மும்பை:மஹாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் மீது புகார் அளித்த மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அவருக்கு எதிராக, மாநில அரசு, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளது.பணியிடமாற்றம்மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சில மாதங்களுக்கு
ரஷ்யா ,மாஜி கமிஷனர்? லுக் அவுட் நோட்டீஸ்  பிறப்பிப்பு!

மும்பை:மஹாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் மீது புகார் அளித்த மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அவருக்கு எதிராக, மாநில அரசு, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளது.


பணியிடமாற்றம்

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சில மாதங்களுக்கு முன், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்தது.இந்த வழக்கை தவறாக வழி நடத்தியதாக, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதைஅடுத்து மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மீது, 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பரம்வீர் சிங் புகார் அளித்தார். இந்த வழக்கை சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், தனித்தனியே விசாரித்து வருகின்றன.

இதற்கிடையே இதை விசாரிக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம், விசாரணைக்கு ஆஜராக்கக்கோரி பரம்வீர் சிங்கிற்கு பல முறை 'சம்மன்' அனுப்பியது எனினும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக, 'ஜாமினில் வெளிவரக்கூடிய கைது வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.


கைது



இந்நிலையில் பரம்வீர் சிங் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் அவருக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' எனப்படும், பார்த்ததும் கைது செய்யக்கூடிய அறிவிக்கையை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X