பொது செய்தி

இந்தியா

ஐஸ் குச்சி இட்லி பிரபலங்கள் கருத்து

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:பெங்களூரு ஓட்டல் அறிமுகம் செய்துள்ள ஐஸ் குச்சி இட்லியின் புகைப்படம், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், ஆனந்த் மஹிந்திரா, சசி தரூர் உள்ளிட்டோரும் இதற்கு கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாரம்பரிய உணவு வகைகள் என பல உணவுகள் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் கிடைக்கக் கூடிய சிற்றுண்டியாக இட்லி
 ஐஸ் குச்சி இட்லி  பிரபலங்கள் கருத்து

புதுடில்லி:பெங்களூரு ஓட்டல் அறிமுகம் செய்துள்ள ஐஸ் குச்சி இட்லியின் புகைப்படம், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், ஆனந்த் மஹிந்திரா, சசி தரூர் உள்ளிட்டோரும் இதற்கு கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாரம்பரிய உணவு வகைகள் என பல உணவுகள் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் கிடைக்கக் கூடிய சிற்றுண்டியாக இட்லி உள்ளது. புகைப்படம்வட மாநிலங்களில் வெவ்வேறு பெயர் மற்றும் வடிவங்களில் இட்லி கிடைக்கிறது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ஓட்டல் ஒன்று, ஐஸ் குச்சியில் இட்லியை வார்த்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஐஸ் குச்சி இட்லியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சாம்பார், சட்னியுடன் ஐஸ் குச்சி இட்லி இருக்கும் புகைப்படத்தை பலரும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். விவாதங்களும் நடந்து வருகின்றன.இந்த விவாதத்தில் சாமானிய மக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களும் இணைந்து உள்ளனர்.

இந்த புகைப்படத்தை, மஹிந்திரா குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். டுவிட்டர்அதன்கீழ் அவர், 'ஐஸ் குச்சி இட்லி, சாம்பார் மற்றும் சட்னிக்கு யார் ஆதரவு அளிக்கிறீர்கள், எதிர்ப்பவர்கள் யார்' எனக் குறிப்பிட்டு உள்ளார்.

காங்., - எம்.பி., சசி தரூர் தன் டுவிட்டரில், 'அபத்தமாக உள்ளது; எனினும் நடைமுறைக்கு உரிய ஒன்று தான்' எனக் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X