தடுப்பணை கட்ட நிதி: மத்திய அரசு பரிசீலனை

Added : அக் 01, 2021
Share
Advertisement
தமிழகத்தில், தடுப்பணைகள் கட்டும் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வந்தால் அவற்றுக்கு நிதி ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படுமென மத்திய அரசு உறுதியளித்துள்ளது.டில்லியில் நடந்த துாய்மை இந்தியா 2.0 மற்றும் நகர்ப்புற சீரமைப்பு திட்டங்களின் துவக்க விழா நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு பங்கேற்றார். நிதி

தமிழகத்தில், தடுப்பணைகள் கட்டும் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வந்தால் அவற்றுக்கு நிதி ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படுமென மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
டில்லியில் நடந்த துாய்மை இந்தியா 2.0 மற்றும் நகர்ப்புற சீரமைப்பு திட்டங்களின் துவக்க விழா நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு பங்கேற்றார். நிதி தேவைஅதன்பின், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியை சந்தித்துப் பேசினார்.

அப்போது அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள பெரிய நகரங்களில் கழிவு நீர் குழாய் அமைப்புகள் இல்லை. எனவே இங்கெல்லாம் இந்த அமைப்பை ஏற்படுத்த வேண்டுமெனில் மத்திய அரசின் நிதி தேவை.எனவே இப்பணிகளுக்கு நிதி அளிப்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

சிறு நகரங்களில் கழிவு நீர் அமைப்புகளை ஏற்படுத்த நிதி ஆதாரம் குறைவாக உள்ளதால், தனி கசடு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நிதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தையும் சந்தித்த அமைச்சர் நேரு, பின் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 528 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து 4.5 கோடி பேருக்கு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. எந்த இடத்தில் தண்ணீர் எடுக்கப்படுகிறதோ, அங்கு நிலத்தடி நீர் மட்டம் குறையும் நிலை உள்ளது.


திட்ட அறிக்கை

இதற்கு தீர்வாக அந்த இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் அங்கு மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும். நிலத்தடி நீர் பெருகும். இதற்கெல்லாம் நிதி தேவைப்படுகிறது. இதை விளக்கியபோது, இத்திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கை அளித்தால், அது குறித்து பரிசீலிப்பதாக நகர்ப்புற மேம்பாடு அமைச்சர் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆகிய இருவருமே உறுதியளித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X