மோடியுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து, நேற்று முதல் துவங்க வேண்டிய நெல் கொள்முதலை இம்மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர்
 மோடியுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு

புதுடில்லி:பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து, நேற்று முதல் துவங்க வேண்டிய நெல் கொள்முதலை இம்மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது நெல் கொள்முதலை உடனடியாக துவங்கும்படி பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பஞ்சாப் காங்., விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க, ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த காங்., தலைவர்களையும், முதல்வர் சரண்ஜித் சிங் சந்தித்து பேசினார்.

பஞ்சாப் காங்., தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் சரண்ஜித் சிங்கை சந்தித்தார்.அப்போது பஞ்சாப் விவகாரம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க, ஒருங்கிணைப்பு குழு உருவாக்க முடிவு செய்யப்பட்டது.


'அவமானத்தால் விலகினேன்'

'பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், ஏதோ சில அழுத்தங்கள் காரணமாகவே காங்.,கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்' என, பஞ்சாப் காங்., பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் கருத்து தெரிவித்தார்.இதற்கு பதில் அளித்த அமரீந்தர் சிங் கூறியதாவது: எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி வலுக்கட்டாயமாக என்னை ராஜினாமா செய்ய வைத்தனர். எனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை இந்த உலகமே பார்த்தது. ஆனால் இதற்கு நேர்மாறான கருத்தை ஹரீஷ் ராவத் தெரிவிக்கிறார்.அவமானத்தால் தான் பதவி விலகினேன். யாரும் அழுத்தம் கொடுத்து விலகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X