போலீசார் செயல்பாடு : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

Updated : அக் 03, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்த பல்வேறு விதமான தவறுகளில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை ஆய்வு செய்ய, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் நிலைக்குழுவை அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.சத்தீஸ்கரை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி குர்ஜிந்தர் பால் சிங் மீதான தேச துரோகம், மிரட்டி பணம்
போலீசார் செயல்பாடு, தலைமை நீதிபதி, வேதனை,

புதுடில்லி :அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்த பல்வேறு விதமான தவறுகளில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை ஆய்வு செய்ய, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் நிலைக்குழுவை அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

சத்தீஸ்கரை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி குர்ஜிந்தர் பால் சிங் மீதான தேச துரோகம், மிரட்டி பணம் பறித்தது மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தலைமை நீதிபதி ரமணா பிறப்பித்த உத்தரவு: நம் நாட்டின் அதிகாரவர்க்கத்தினர் குறிப்பாக போலீஸ் அதிகாரிகளின் நடத்தையில் எனக்கு மாற்று கருத்துக்கள் உள்ளன.

அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து அவர்கள் பல்வேறு தவறுகளில் ஈடுபடுகின்றனர். இது குறித்து ஆய்வு செய்ய, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் நிலைக்குழு அமைப்பது குறித்து ஒருகட்டத்தில் தீவிரமாக சிந்தித்தேன். அதை உடனடியாக அமல்படுத்தாவிட்டாலும், பிற்காலத்தில் அமல்படுத்தும் எண்ணம் உள்ளது.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
04-அக்-202110:12:45 IST Report Abuse
JeevaKiran முதலில் இந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அ.வியாதிகளுக்கு ஊளை கும்பிடு போடுவதை நிறுத்தணும். அவர்களுக்கு கீழ் மட்டத்திலுள்ள போலீஸ் காரர்களெல்லாம் தில்லாகத்தான் செயல்படுகிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளின் பேச்சுக்கு கீழ்ப்படிய வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், அ.வியாதிகளை ஒன்றுமே செய்ய முடிவதில்லை. அப்போ முதல் குற்றவாளி, போலீஸ் உயர் அதிகாரிகள்தான்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
02-அக்-202118:38:21 IST Report Abuse
Narayanan ஆட்சிக்கு வரும் கயவர்கள் நாங்கள் உங்கள் வேலைக்காரர்கள் என்கிறார்கள் . அப்போ பொதுமக்கள் முதலாளிகள்தானே . அப்போ முதலாளிகளை நிற்கவைத்து விட்டு இவர்கள் சொகுசு காரில் பறப்பார்களாம். இனி எல்லோரும் சமமாகத்தான் பயணிக்கவேண்டும் . போலீஸ்காரர்களும் பொதுமக்களின் நண்பன் என்கிறார்கள் . ஆக மக்களை முட்டாளாக்குகிறார்கள் .
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-அக்-202111:23:59 IST Report Abuse
RajanRajan ஜுட்ஜ் சாமி இங்கே போலீசார் மட்டுமல்ல அரசியல்வாதிகளின் எடுபிடியாக செயல்படுவது. நல்லா ஆழமா கூர்ந்து பாருங்கள் IAS அதிகாரி முதல் பெரும்பான்மை அரசு ஊழியர்களுக்கு இந்த அரசின் ஆதாய சேவை என்னவென்றால் மாத சம்பளம், தினகிம்பளம் பிளஸ் அப்பப்ப சம்பள உயர்வு படி என மக்கள் பணத்தை வாரி இறைத்து சராசரி மனிதர்களை கடன்காரனாகி தனி ஒரு அரசியல் குடும்ப ஆதாய தர்பாரே அரங்கேறி கொண்டிருக்கிறது. ஒரு அரசு ஊழியருக்கு சம்பளம் கொடுப்பது மக்கள் அதே மக்களிடம் இருந்து லஞ்சம் வாங்கி தின சேவை செய்வதும் அந்த வெட்கம் கெட்ட பெரும்பான்மை அரசு ஊழியர்கள். இதுதான் சாமி உண்மையான ஜனநாயக படுகொலை. இதற்காகவா சுதந்திரம் பெற்றோம் என அங்கலாய்ச்சது தான் மிச்சம். பிரிட்டிஷ்காரன் நம்மளை சுரண்டினதுக்கு மேலே நாம் உருவாக்கி வைத்துள்ள அரசியல்வாதிகள் தான் மக்களை சுரண்டியே வாழும் தீவிரவாதிகள் மைலார்டு. வானம் எனக்கொரு போதிமரம் நாளும் என்னது சேதி தரும் உலகம் ஒரு நாள் நீதி பெறும்... எனும் கானம் தான் ஒலிக்கிறது மைலார்டு. லஞ்சம் வாங்கினவன் கையும் களுவுமாக பிடிபட்டால் உடனடியாக தூக்கு தண்டனை என்று சட்டம் போட்டு எங்கே செயல்படுங்கள் சாமிகளா. அட என்னடா இது இப்படி விட்டுவிளசுற. தலைமுறைக்கு நாம அங்கலாய்ச்சோம் இன்னிக்கு ஜுட்ஜ் சாமி அங்கலாய்க்குதேன்னு தான் அண்ணா. ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X