பொது செய்தி

தமிழ்நாடு

காட்பாடி அரசு பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்கள் சர்வதேச முதியோர் தின உறுதிமொழி

Added : அக் 01, 2021
Share
Advertisement
சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் 1, இன்று முதியோர் தின உறுதிமொழியினை மாணவர்கள் முதியோர்களை பராமரிக்கும் வண்ணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமையில் உதவி தலைமையாசிரியைடி.என்.ஷோபா, கே.திருமொழி, ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் உடற்கல்வி ஆசிரியை புவனா,

சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் 1, இன்று முதியோர் தின உறுதிமொழியினை மாணவர்கள் முதியோர்களை பராமரிக்கும் வண்ணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமையில் உதவி தலைமையாசிரியைடி.என்.ஷோபா, கே.திருமொழி, ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் உடற்கல்வி ஆசிரியை புவனா, கௌசல்யா மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் அனைவரும் முதியோர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


சிறுவயதில் என்னை கவனமுடன் பராமரித்து வளர்க்கின்ற பெற்றோர்களையும் அளவில்லா அன்பைப் பொழியும் தாத்தா, பாட்டியையும் அரவணைத்து பாசத்துடன் நடத்துவேன்.
எனது வீட்டிற்கு அருகில் உள்ள முதியர்களையும் சமுதாயத்தில் நான் தினமும் சந்திக்கும் முதியர்களையும் கேலி கிண்டல் செய்யாமல் அனைவரையும் கடுஞ்சொற்களால் பேசாமல் அன்புடன் நடத்துவேன்.

எனது எதிர்காலம் எனது கல்வியியினால் மட்டுமல்லாது அவர்களது ஊக்குவிப்பினாலும் தான் என்பதை புரிந்து கொண்டுள்ளேன்முதியோருக்கு என்னாலான உதவிகள் செய்து அவர்களுக்கு எவ்வித இன்னல்களும் ஏற்படாதவண்ணம் அவர்களைப் பாதுகாப்பேன். முதியோரின் அனுபவங்களை பொக்கிஷமாகக் கருதி அவர்கள் காட்டும் நல்வழியில் நடப்பேன் இதனை எனது சக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துக்கூறுவேன் என உறமான உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X