பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி கொள்கை மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியீடு

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:'ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்கள், முழுமையாக தடுப்பூசி போட்டு இருந்தாலும், 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டன் அரசு அங்கீகரிக்க முதலில் மறுத்தது. பின், அங்கீகாரம் வழங்கினாலும், இந்திய தடுப்பூசி சான்றிதழ் முறையில் சிக்கல் இருப்பதாக

புதுடில்லி:'ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்கள், முழுமையாக தடுப்பூசி போட்டு இருந்தாலும், 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டன் அரசு அங்கீகரிக்க முதலில் மறுத்தது. பின், அங்கீகாரம் வழங்கினாலும், இந்திய தடுப்பூசி சான்றிதழ் முறையில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தது.'வரும் 4ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வருபவர்கள் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டு இருந்தாலும், அவர்கள் தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவர். 'அவர்களுக்கு 10 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்' என, பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்தது.


எச்சரிக்கை



இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. 'பிரிட்டன் அரசின் இந்த செயலுக்கு தக்க பதிலடி தரப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசு நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன் விபரம்:வரும் 4ம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு இருந்தாலும், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக, கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.மீண்டும் பரிசோதனைஇந்தியா வந்து இறங்கியதும், இங்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பின், 10 நாட்களுக்கு தங்கள் வீட்டிலோ அல்லது தங்கும் இடத்திலோ கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எட்டாவது நாளில் மீண்டும் ஒரு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X