பொது செய்தி

தமிழ்நாடு

ரவுடிகளிடம் ஆயுத புழக்கம் அதிகரிப்பு: அலட்சிய போலீசாரிடம் விளக்கம் கேட்பு

Updated : அக் 03, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை ;ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரிடம், கத்தி, வாள், அரிவாள், துப்பாக்கிகள் என பயங்கர ஆயுதங்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அளவுக்கு, அலட்சியமாக இருந்தது ஏன் என்பது குறித்து, போலீசாரிடம் மண்டல ஐ.ஜி.,க்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.தமிழகத்தில் தலைகளைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்யும் கலாசாரம் தலை துாக்கி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள்
ரவுடிகள், ஆயுத புழக்கம் அதிகரிப்பு,  போலீசார், விளக்கம் கேட்பு

சென்னை ;ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரிடம், கத்தி, வாள், அரிவாள், துப்பாக்கிகள் என பயங்கர ஆயுதங்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அளவுக்கு, அலட்சியமாக இருந்தது ஏன் என்பது குறித்து, போலீசாரிடம் மண்டல ஐ.ஜி.,க்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.

தமிழகத்தில் தலைகளைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்யும் கலாசாரம் தலை துாக்கி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் நடமாட்டமும்அதிகரித்து வருகிறது. இது குறித்து, கவர்னர் ஆர்.என்.ரவி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை அழைத்து விளக்கம் கேட்டார்.



சமூக விரோத செயல்



இந்த சந்திப்புக்கு பின், மாநிலம் முழுதும், கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை டி.ஜி.பி., முடுக்கி விட்டார். போலீசார் 52 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தி, கொலை வழக்கில் சிக்கிய 3,325 ரவுடிகளை கைது செய்தனர்.அவர்களிடம், கத்தி, வாள், வீச்சரிவாள் என 1,110 பயங்கர ஆயுதங்கள், ஏழு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இந்த ஆயுதங்களை பார்த்து போலீஸ் அதிகாரிகளே மிரண்டனர்.ரவுடிகளிடம் சர்வ சாதாரணமாக ஆயுத புழக்கம் அதிகரிக்கும் அளவுக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் போலீசார் என்ன செய்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம், ஆயுத பரவலை கட்டுப்படுத்த, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, டி.ஜி.பி., அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

இந்நிலையில், ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரிடம் சர்வ சாதாரணமாக ஆயுத புழக்கம் அதிகரிக்க காரணம் என்ன; அவர்கள் மீது முன் கூட்டியே நடவடிக்கை எடுத்து, ஆயுதங்களை கைப்பற்றாமல் அலட்சியமாக இருந்தது ஏன்?ரவுடிகளை தப்பிக்க விட்டு மாமூல் வசூலித்தீர்களா என்பது குறித்து, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., உள்ளிட்டோரிடம், மண்டல ஐ.ஜி.,க்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.
ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒழிப்பது, போலீஸ் அதிகாரிகளின் அன்றாட பணி. நடமாட்டத்தில் உள்ள ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கண்காணிக்க வேண்டும்.


குட்டி துாக்கம்



சிறைகளில் இருந்து வெளியே வந்துள்ள ரவுடிகளின் பட்டியலும் அவர்களிடம் இருக்கும். இந்த ரவுடிகளையும் கண்காணிக்க வேண்டும். வெளி மாநிலம் மற்றும்மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ரவுடிகள் குறித்து, உளவுத் துறை போலீசார் கண்காணித்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவை அனைத்தும், கடிகார முட்களை போல செயல்பட்டவாறு இருக்க வேண்டும். காலையில் 7:00 மணிக்கு வந்தோம்; மதியம் 2:00 - 5:00 மணி வரை குட்டி துாக்கம்; எப்போதும், 'மீட்டிங்கில்' இருப்பது போன்ற நடிப்பு எல்லாம், ஒருபோதும் குற்றங்களை குறைக்கவோ, ரவுடிகளை ஒழிக்கவோ உதவாது.
இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202121:13:46 IST Report Abuse
Akilan Archana Please don’t repeat the same comment
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-அக்-202119:20:45 IST Report Abuse
RajanRajan ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒழிப்பது, போலீஸ் அதிகாரிகளின் அன்றாட பணி. நடமாட்டத்தில் உள்ள ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கண்காணிக்க வேண்டும். ஏன் போலீஸ் சாமி எங்கேயோ ஒரு தேசத்திலே அதன் அதிபர் ஒரே மாசத்தில் ரவுடி கூலி படைகளை சுட்டு தள்ளி சுத்தம் பண்ணினதா நாளிதழ் தகவ சொல்லுது. அதை விடுங்க சாமி நம்ம U .P முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏகப்பட்ட ரவுடிகளை என்கவுன்ட்டர் பண்ணி மாநிலத்தை சுத்த படுத்தினார். அதுமாதிரி இங்கத்த திராவிட முதல்வர் ஆட்சி பீடம் ஏறி ஏன் இத்தனை நாள் சட்டம் ஒழுங்கை பற்றி சிந்திக்கவில்லையாம். கூலிப்படை ஆட்சி என்பது தவிர்க்க முடியாததா என்ன?? திராவிடனே. கவர்னர் வந்து தான் இதெல்லாம் பார்க்கணுமா என்ன.??? சும்மா தேர்தல் வாக்குறுதி கணக்கு கொடுத்த போதுமா என்ன.?? பாக்கிஸ்தான் தலிபான் மாதிரி இங்கத்த ஆட்சிலே 2515 ரவுடிகள் உலாத்திக்கிட்டு இருந்திருக்கிறானுங்க. எதுப்பா தீவிரவாதிகளின் சொர்க்கபுரி தமிழ்நாடா பாகிஸ்தானா தலிபான் தேசமா??? கைச்சிட்டாப்பா நோன்பு கஞ்சியை பூரா தமிழகத்திலேயும். போலீஸ் சாமிகளா நல்லா தேடி பாருங்க இவனுங்க ராக்கெட் லாஞ்செர் கூட வச்சிருப்பானுங்க. வாழ்க அண்ணா நாமம்.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
02-அக்-202110:57:56 IST Report Abuse
RaajaRaja Cholan உயர் திரு சைலேந்திரபாபு அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டால் , இதை விட பன்மடங்கு சிறப்பாக செய்வார். ஆனால் இன்றைய , இதற்க்கு முந்தைய தமிழக அரசியலில் , வெளிப்படையாக சுதந்திரமாக செயல்படுவதாக அரசு ஊழியர்கள் கூறினாலும் , உண்மை அவர்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X