பொது செய்தி

தமிழ்நாடு

33,384 மனைப் பிரிவுகள் வரன்முறைக்கு ஒப்புதல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை:அங்கீகாரமில்லாத 33 ஆயிரத்து 384 மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய, தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனைக்கு 2017ல் தடை விதிக்கப்பட்டது. இதனால், 2016 அக்., 20க்கு முன் உருவாக்கப்பட்ட மனைப் பிரிவுகளை வரன்முறை செய்யும் திட்டம் 2017 மே 4ல் அறிவிக்கப்பட்டது.இதில், 2019

சென்னை:அங்கீகாரமில்லாத 33 ஆயிரத்து 384 மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய, தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனைக்கு 2017ல் தடை விதிக்கப்பட்டது. இதனால், 2016 அக்., 20க்கு முன் உருவாக்கப்பட்ட மனைப் பிரிவுகளை வரன்முறை செய்யும் திட்டம் 2017 மே 4ல் அறிவிக்கப்பட்டது.இதில், 2019 நவ., 3வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வரன்முறை பணிகள் முடங்கின.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மற்றும் நகர் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., ஆகியவை, இதில் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கி வருகின்றன. பணியாளர்கள், அதிகாரிகள் பற்றாக்குறையால் ஏற்பட்ட தொய்வு, படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து, வீட்டுவசதி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம் முழுதும் இருந்து 35 ஆயிரத்து 161 மனைப் பிரிவுகளை வரன்முறைபடுத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது வரை, 33 ஆயிரத்து 384 மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த, தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதில், சி.எம்.டி.ஏ., சார்பில் 5,435; டி.டி.சி.பி., சார்பில் 27 ஆயிரத்து 949 மனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, அங்கீகாரமில்லாத 5.87 லட்சம் மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பம் பெறப்பட்டது. அதில், 5.75 லட்சம் மனைகளுக்கு வரன்முறை ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X